நிர்வாணமாக நின்றால் கேசவ விநாயகம் என்ன செய்வார் தெரியுமா?… பாஜக பெண் நிர்வாகி பகீர்

தமிழக பாஜகவில் பல்வேறு காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் சமீபத்தில் திருச்சி சிவாவின் மகனும், தமிழக பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளருமான சூர்யா சிவா தமிழக பாஜக சிறுபான்மையினர் அணியின் பெண் நிர்வாகியான டெய்சி தங்கையாவை ஆபாசமாக பேசிய ஆடியோ வைரலானது. அந்த ஆடியோவில் சூர்யா டெய்சியை மிகவும் தரக்குறைவாக பேசி நீ அமித்ஷாட்ட போ, மோடிட்ட வேணாலும் போ என்னை உன்னால ஒன்னும் செய்ய முடியாது. உன்னை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்தார். 

அதனையடுத்து திருப்பூரில் இருவரிடமும் விசாரணை நடந்தது. அந்த விசாரணையின் முடிவில் இருவரும் சமரசமாக செல்கிறோம் என கூறி பிரச்னையை முடித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டெய்சி, இந்த விவகாரத்தை எங்களுக்குள் பேசி விட்டுவிடுவோம் என்று முடிவெடுத்துவிட்டோம். பிரதமரின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு இந்தக் கட்சிக்கு வந்திருக்கிறோம்.

ஏதோ ஒரு கண் பட்ட மாதிரி ஒரு நிகழ்வு நடந்துவிட்டது. அவர் என் தம்பி மாதிரி. ஆரம்பத்தில் அவர் என்னை அக்கா என்று அழைத்தார். நான் அவரை தம்பி என்றே அழைத்தேன். இனியும் நாங்கள் அப்படியே பயணிப்போம். ஒழுக்கமான கட்சி என்று பெயர் எடுத்திருக்கும்போது இது ஒரு சின்ன அசம்பாவிதம்” என்றார்.

இதற்கிடையே இருவருக்குமிடையேயான ஆடியோவில் தமிழக பாஜகவின் அமைப்பு செயலாளரான கேசவ விநாயகத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து அவரை மட்டும் ஏன் தண்டிக்கவில்லை என கேள்வியும் பலரால் முன்வைக்கப்பட்டது.

Kesava Vinayagam

இந்நிலையில் டெய்சி தங்கையா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கேசவ விநாயகம் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கேசவ விநாயகம் எப்படிப்பட்டவர் என்றால் அவருக்கு முன் ஒரு பெண் நிர்வாணமாக நின்றால்கூட திரும்பி பார்க்கமாட்டார்” என்றார். தற்போது டெய்சி தங்கையாவின் இந்தப் பேட்டி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

அது எப்படி பாஜகவில் மட்டும் ஒருவரை நல்லவிதமாக உதாரணம் கூறும்போதுகூட ஆபாசமாகவே உதாரணம் கூறுகிறார்கள் என நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பிவருகின்றனர். இதேபோல் சூர்யாவும், டெய்சியும் அக்கா, தம்பி என கூறியபோது, அக்காவும், தம்பியும் இப்படியா பேசிக்கொள்வார்கள் எனவும் நெட்டிசன்ஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.