ச்சீ… ராணவ உடையணிந்து செய்ற செயலா இது? வேலூர் போலீசிடம் வசமாய் சிக்கிய கேரள வாலிபர்!

வேலூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்குட்பட்ட அப்துல்லாபுரம் தெள்ளூர் சாலையில் உதவி ஆய்வாளர் ரவி தலைமையிலான காவலர்கள் ரோந்து மேற்ககொண்டிருந்தனர். அப்போது தெள்ளூர் கூட்டுச்சாலையில் ராயல் என்பீல்டு இருசக்கர வாகனத்தில் இராணுவ உடை அணிந்து சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளார். மேலும் தான் ஓர் இராணுவ வீரர் என கூறியுள்ளார். காவலர்கள் இராணுவ அடையாள அட்டை கேட்டதற்கு வாக்காளர் அடையாM அட்டை காட்டி உள்ளார்.இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவே, காவலர்கள் அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் 2 பொட்டலங்களில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

உடனே அவரை கைது செய்த காவலர்கள் சுமார் 25 ஆயிரம் மதிப்பிலான 5 கிலோ முதல் ரக கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயண்படுத்திய KL 52 M 3469 என்ற பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார். அவரை விரிஞ்சிபுரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், கைதான நபர் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முகமது பஷீர் என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர் ஒடிசா மாநிலம் ஜான்வே பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கிக் கொண்டு ஆந்திர மாநிலம், தமிழகம் வழியாக கேரளாவுக்கு கடத்தி செல்வது போலீசாருக்கு தெரிய வந்தது.

தமது பயணத்தின்போது வழியில் காவல் துறையினரிடம் சிக்காமல் இருக்க பகலில் ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு இராணுவ வீரர் போல் உடை அணிந்து கொண்டு இரவில் மட்டுமே அவர் பயணம் செய்துள்ளார்.

ஒடிசாவில் கிடைக்கும் முதல் ரக கஞ்சாவை குறைந்த விலைக்கு வாங்கி அதை கேரளாவில் அதிக விலைக்கு விற்பதை இவர் தொழிலாக கொண்டுள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இவர் ஒடிசாவில் இருந்து வரும் வழியில் பல பகுதிகளில் டெலிவரி பாய் போல் கஞ்சாவை சப்ளை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், கைதான முகமது பஷீரை சேலத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (NDBS) ஆஜர்படுத்திய பிறகு சிறையில் அடைக்க உள்ளனர்.

தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க ஆபரேஷன் கஞ்சா என்ற பேரில் தமிழக போலீசார் வேட்டை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.