மயிலாடுதுறை: சீர்காழி அருகே இயற்கை முறையில் பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்து விவசாயம் செய்து வரும் பட்டதாரி இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கீழச்சாலை கிரமத்தை சேர்ந்த அருளானந்தம் தனது 2 ஏக்கர் நிலத்தில் மாப்பிளை சம்பா, கருப்பு கவுனி, கிச்சலி சம்பா, சீரகச் சம்பா உள்ளிட்ட நெல் ரகங்களை தேடி சேகரித்து சாகுபடி செய்து வருகிறார். மண்புழு, கடல் பாசி, இல்லை சத்து, சாணம், எள்ளு, புண்ணாக்கு போன்றவற்றை வயலில் உரமாக இடுவதால் பூச்சி தாக்குதல் இல்லாமல் மகசூல் அதிகரித்து வருகிறது.
இதனால், அருளானந்தத்தை பார்த்து 10-க்கு மேற்பட்ட விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறியுள்ளனர். ஒரே நாளின் 44செ.மீ. கனமழை கொட்டி தீர்த்தும் 6 அடி உயரமுள்ள கிச்சலி சம்பா பயிர் சாயாமல் நிற்பது பாரமப்பரிய நெல்லின் தரத்தை மெய்ப்பிக்கிறது. இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரசாயனம் இல்லாத அரிசி வகைகளை பள்ளிகளில் மதிய சத்துணவு, அங்கன்வாடி மையம், ரேஷன் கடைகளில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றன.