
மனைவி சங்கீதாவுடன் வாரிசு படம் பார்த்த விஜய்
வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள படம் வாரிசு. இப்படம் இன்றைய தினம் திரைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அமெரிக்காவிலிருந்து இந்தியா திருப்பி உள்ள விஜய்யின் மனைவி சங்கீதா அவருடன் இணைந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு திரையரங்கில் வாரிசு படத்தின் சிறப்பு காட்சியை கண்டுகளித்துள்ளார். அதோடு நேற்று விஜய்யும் அவரது மனைவியும் படம் பார்க்க தியேட்டருக்கு வந்தபோது இரண்டு மணி நேரம் படத்தை திரையிட கால தாமதம் ஆகியுள்ளது. இதன் காரணமாக 6.30 மணிக்கு முடிய வேண்டிய வாரிசு பட காட்சி, இரவு 8.30 மணிக்கு முடிவடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.