சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கக்கூடிய பொருட்களை பாக்கெட் மூலமாக வழங்க முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
ரேஷன் கடைகளில் வழங்கக்கூடிய பொருட்களை பாக்கெட் மூலமாக வழங்க அரசு முன்வருமா என்று சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, “நியாய விலைக் கடைகளில் கைரேகை பதிவு மூலமாக பொருட்கள் பெற முடியவில்லை என்றால், கண் கருவிழி பதிவு மூலமாக பொருட்களை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாய விலைக் கடைகளில் வழங்கக்கூடிய பொருட்களை பாக்கெட் மூலமாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.