சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பேரூராட்சி சார்பாக சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.
இந்த வார சந்தையில் இருந்து எடப்பாடி, கொங்கணாபுரம், சின்னப்பம்பட்டி, சங்ககிரி, ஆட்டையாம்பட்டி உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.
அந்த வகையில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொங்கணாபுரம் வாரச் சந்தையில் ஆடு விற்பனை களைகட்டியுள்ளது. இந்த வார சந்தையில் ஆடு ஒன்று ரூ.8,000 முதல் ரூ.15,000 ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது. அதேபோல் ரூ.3,000 -க்கு சண்டை சேவல்கள் விற்பனையானது.
இந்த சந்தையில் ஒரு சேவலின் விலை ரூ.2,000 முதல் ரூ.5,000 ரூபாய் வரை விற்பனையானது. மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று மட்டும் கொங்கணாபுரம் வாரச்சந்தையில் சுமார் ரூ.6 கோடிக்கு ஆடு மற்றும் கோழி விற்பனையாகியுள்ளது.