நடிகை அபர்ணாவிடம் தவறாக நடக்க முயன்ற மாணவர்: வீடியோவில் அம்பலம்| Student Misbehaved with Aparna Balamurali at Kerala College Function

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருவனந்தபுரம்: தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் அபர்ணா பாலமுரளி, கேரளாவில் உள்ள கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, மாணவர் ஒருவர், அவரிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அபர்ணா ‛நைஸாக’ நழுவினார்.

சமீபத்தில் கேரளாவில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அபர்ணா பாலமுரளி, வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட ‛தங்கம்’ படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். சட்டக் கல்லூரியில், அபர்ணாவை வரவேற்க ஒரு மாணவர் மேடைக்கு அழைக்கப்பட்டார்.

அமர்ந்திருந்த அபர்ணாவிடம் கை குலுக்கிய அவர், பின்னர் அபர்ணாவை எழுந்திருக்க சொல்லி, அவர் தோள் மீது கை வைக்க முயற்சித்தார். மாணவரின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த அபர்ணா, அங்கிருந்து விலகினார்.

latest tamil news

அந்த மாணவர் பின்னர் மேடைக்கு வந்து மன்னிப்பு கேட்டதோடு, தான் ஏன் அவ்வாறு நடந்துக் கொண்டேன் என்பதற்கான விளக்கத்தை தெரிவித்த நிலையில், மேடையில் இருந்த கல்லூரி நிர்வாகிகள் யாரும் மாணவரின் நடத்தையை கண்டிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அபர்ணாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் ரசிகர்கள், கல்லூரியை கண்டித்தும் வருகிறார்கள்.

latest tamil news

ஒருவரைத் தொடுவதற்கு முன் அவரை தனிப்பட்ட முறையில் நீங்கள் அறிந்தவராக இருக்க வேண்டும் என்றும், இந்த கல்லூரி மாணவர் சூழ்நிலையைப் பயன்படுத்த முயன்றார் எனவும் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதோடு, ஒருவரின் தோளில் கை வைப்பது அந்தரங்கமான செயல் என்றும், அதே பாலினத்தைச் சேர்ந்த அந்நியர் இதைச் செய்தால் கூட, சங்கடமான தருணமாக மாறும் என்றும் குறிப்பிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.