சென்னை: சாலை மற்றும் தெருக்களுக்கான பெயர்ப் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி மீண்டும் அறிவித்து உள்ளது. ஏற்கனவே பலமுறை இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ள மாநகராட்சி, இதுவரை எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வரும் நிலையில், மீண்டும் நடவடிக்கை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பொதுமக்களிடையே நகைச்சுவையை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள […]
