ரூ.300 கோடியை தாண்டிய வாரிசு வசூல்! மீண்டும் வம்சி இயக்கத்தில் விஜய்?

பொங்கல் பண்டிகையையொட்டி அஜித்தின் ‘துணிவு’ படத்தோடு, விஜய்யின் ‘வாரிசு’ படம் மோதியது.  இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்களின் ஒரே நாளில் மோதிக்கொள்ளும் செய்தி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  படத்தின் வெளியீட்டு நாளிலும் திரையரங்குகள் திருவிழாக்கோலமாக காட்சியளித்தது, இதில் பல கலவரங்களும் நடந்தது குறிப்பிடத்தக்கது.  அஜித்தின் ‘துணிவு‘ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய இரண்டு படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்று இன்று வரையில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.  ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளரும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவருமான தில் ராஜு ‘வாரிசு’ படம் உலகளவில் பாக்ஸ் ஆபிசில் ரூ.300 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.  

தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின்படி அடுத்த இரண்டு வருடங்களில் வம்சி பைடிப்பள்ளி-விஜய் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ‘லியோ’ படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ‘தளபதி 68’ படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானது.  தற்போது வம்சி-விஜய் மீண்டும் இணைவதாக கூறப்படும் படம் ‘தளபதி 69’ அல்லது ‘தளபதி 70’ ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘வாரிசு’ படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு, சங்கீதா, பிரகாஷ் ராஜ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர்.  தமன் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு‘ படத்தை மறக்க செய்யும்படி அவரது 67வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிப்பதாக நீண்ட நாட்களாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  ‘தளபதி 67’ என்று தாற்காலிகமாக பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு தற்போது லியோ என்று அதிகாரபூர்வ தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில் பல வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடிப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் விஜய்க்கு எப்படி லியோ 67வது படமோ, அதேபோல த்ரிஷாவுக்கும் லியோ 67வது படம் என்பது தான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.