திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் காக்கலூர் நெடுஞ்சாலையில் வாடகைக்கு அறை எடுத்து அலுவலகமாக நடத்தி வருகிறார்.
அங்கு அவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 51 பேரிடம் ரூபாய் ஒரு கோடியே 40 லட்சம் மோசடி செய்ததாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் ஒன்று வந்தது.
அந்த புகாரின் படி, குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் துணைத் தலைமை காவலர்கள் சுப்பிரமணி, மோகன் மற்றும் சக போலீசார் பணமோசடியில் ஈடுபட்ட வசந்த் குமாரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், குற்றப்பிரிவு போலீசார் வசந்த் குமாரை அவருடைய வீட்டின் அருகே சுற்றி வளைத்து கைது செய்தனர். அத்துடன் அவரிடமிருந்து போலி அரசு அடையாள அட்டை, போலி பணியாணை, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.