மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 61,032 புள்ளிகளில் வர்த்தகமாகி நிறைவடைந்தது. முதலீட்டாளர்கள் பங்குகளை ஆர்வத்துடன் வாங்கியதால் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 1% அதிகரித்துள்ளன. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 21 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 150 புள்ளிகள் உயர்ந்து 17,920 புள்ளிகளில் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
