Kamal Haasan: அமைச்சரானதும் முதல் வேலையா கமலுக்கு நோ சொன்ன உதயநிதி ஸ்டாலின்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Udhayanidhi stalin interview: மாமன்னன் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுவதாக தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் அது குறித்து மீண்டும் பேசியிருக்கிறார்.

​மாமன்னன்​மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அண்மையில் தான் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. மாமன்னனுடன் நடிப்புக்கு முழுக்கு போடும் முடிவில் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் கடைசி சினிமா பேட்டி அளிக்கிறேன் என செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.

​Kamal Haasan: ப்ராஜெக்ட் கே பட்ஜெட் ரூ. 600 கோடி: பிரபாஸுக்கு ரூ. 150 சி, கமலுக்கு ரூ. 130 சி இல்ல ரூ. 20 கோடிப்புசுனைனா​பாலாவுடன் Dance ஆடிய நடிகை சுனைனா!​​உதயநிதி ஸ்டாலின்​செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை பார்த்துவிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஆசை வந்தது. அந்த ஆசை நிறைவேறிவிட்டது. மேலும் மிஷ்கின், மகிழ்திருமேனி ஆகியோர் இயக்கத்திலும் நடிக்க ஆசைப்பட்டேன். அதுவும் நடந்துவிட்டது. நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து வந்தபோது மாமன்னன் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். தற்போதும் உறுதியாக இருக்கிறேன் என்றார்.

​வரமாட்டேனு சொன்னேன்​முதலில் நான் சினிமாவுக்கு வர மாட்டேன் என்று கூறினேன். ஆனால் வந்தேன். அதன் பிறகு அரசியலுக்கு வர மாட்டேன் என்றேன். அரசியலுக்கு வந்து இன்று அமைச்சரும் ஆகிவிட்டேன். தற்போது என் முன்பு மக்கள் பணி நிறைய இருக்கிறது. முதலில் அவற்றை செய்து முடிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.
​கமல் தயாரிப்பு​STR50:சிம்புவின் எஸ்.டி.ஆர். 50 படத்தை இயக்கும் மணிரத்னம், தயாரிக்கும் கமல்?கமல் ஹாசன் தயாரிப்பில், வெற்றிமாறன் திரைக்கதையில் நான் நடிப்பதாக இருந்தது. நான் அமைச்சராக பதவியேற்றதுமே கமலிடம் சென்று, என்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறினேன். அவரோ, அந்த படத்தை பற்றி கவலைப்படாதீர்கள். திரைப்பணியை விட மக்கள் பணியே மகத்தானது. இந்த கதை உங்களுக்காக காத்திருக்கும் என்று கூறினார் என்றார் உதயநிதி ஸ்டாலின்.​வடிவேலு தான் மாமன்னன்​மாமன்னன் படத்தில் நான் சாதாரண மன்னன். வடிவேலு தான் மாமன்னன். இந்த படம் மாரி செல்வராஜின் அரசியல் பற்றி பேசுகிறது. நான் இதுவரை நடித்த படங்களில் இது முக்கியமானதாக மற்றும் எனக்கு பிடித்த படமாக இருக்கும் என உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

​ரசிகர்கள்​இனி நடிக்கவே மாட்டேன் என உதயநிதி ஸ்டாலின் சொன்னதில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே. நடிக்க மாட்டேன் என்று சொன்னால் நிச்சயம் தொடர்ந்து நடிப்பார் என்கிறார்கள் ரசிகர்கள். முன்னதாக அரசியலுக்கு போக மாட்டேன் என மனைவி கிருத்திகாவுக்கு வாக்குறுதி அளித்தார் உதயநிதி ஸ்டாலின். ஆனால் அதையும் மீறி அரசியலுக்கு வந்து அமைச்சராகவிட்டார். கணவரின் நிலையை புரிந்து கொண்ட கிருத்திகா அது குறித்து ஒன்றும் சொல்லவில்லையாம்.

Super Singer 9 winner Aruna:சாதியை கேட்பாங்க, பயந்து ஒளிந்திருக்கேன்: சூப்பர் சிங்கர் 9 வின்னர் அருணா கண்ணீர்
https://tamil.samayam.com/tv/news/super-singer-9-title-winner-aruna-gets-emotional-about-caste-in-a-viral-video/articleshow/101276645.cms
​வெற்றிமாறன் படம்​வெற்றிமாறனின் திரைக்கதை என்றால் அது நிச்சியம் வித்தியாசமானதாகத் தான் இருக்கும். அந்த கதை உங்களுக்காக காத்திருக்கும் என்று வேறு கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். அதனால் மக்கள் பணிக்கு இடையே கொஞ்சம் திரைப்பணியையும் சேர்த்து கவனிக்க வேண்டும் என ரசிகர்கள் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

​Super Singer 9 winner Aruna:சாதியை கேட்பாங்க, பயந்து ஒளிந்திருக்கேன்: சூப்பர் சிங்கர் 9 வின்னர் அருணா கண்ணீர்

​ஹீரோ அவதாரம்​தயாரிப்பாளராக கோலிவுட் வந்த உதயநிதி ஸ்டாலின் திடீரென்று ஒரு நாள் ஹீரோ அவதாரம் எடுத்தார். அவர் ஹீரோவாக நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் உதயநிதிக்கு நண்பனாக நடித்து காமெடியில் கலக்கினார் சந்தானம். மேலும் உதயநிதி, ஹன்சிகா இடையேயான கெமிஸ்ட்ரியும் ஒர்க்அவுட் ஆனது.

​வித்தியாசமான படங்கள்​ஹீரோவாகியாச்சு, மாஸ் காட்டணும் என்று எல்லாம் உதயநிதி ஸ்டாலின் நினைக்கவில்லை. தனக்கு எது வருமோ அதை தான் திரையில் காட்டினார். தொடர்ந்து வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். முதல் படத்தில் அவர் டான்ஸ் ஆடியதை வைத்து ரசிகர்கள் கிண்டல் செய்தார்கள். தற்போது டான்ஸில் எவ்வளவோ முன்னேறிவிட்டார். இப்படி கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பை நிறுத்தவே கூடாது என்பதே ரசிகர்களின் விருப்பம். அதை அவர் நிறைவேற்றி வைப்பார் என நம்பப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.