ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தெலுங்கு, தமிழ் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் சுரேகா வாணி. கணவரை இழந்த அவர் தன் மகளுக்காக தைரியமாக இருந்து வருகிறார்.
படத்துல எனக்கு நல்ல கேரக்டர் குடுத்தாங்க
இந்நிலையில் அவருக்கும், போதைப் பொருள் வழக்கில் கைதான தெலுங்கு தயாரிப்பாளர் கே.பி. சவுத்ரிக்கும் தொடர்பு இருப்பதாக பேச்சு கிளம்பியது. சவுத்ரியும், சுரேகா வாணியும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அந்த புகைப்படத்தை வைத்து சவுத்ரியுடன் சுரேகாவை சேர்த்து வைத்து பேசினார்கள். தெலுங்கு திரையுலக பிரபலங்கள் சவுத்ரியுடன் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்பட்டது. அந்த பிரபலங்களில் சுரேகா வாணியும் ஒருவர் என பேசினார்கள்.
இதையடுத்து விளக்கம் அளித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சுரேகா. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளால் என் கெரியர், என் எதிர்காலம், என் பிள்ளையின் எதிர்காலம், உடல்நலம், குடும்பம் பாதிக்கப்படுகிறது. அதனால் தயவு செய்து அப்படி பேசாதீர்கள். எங்கள் வாழ்க்கையுடன் விளையாடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள Bonakal Mandal-ஐ சேர்ந்தவர் சங்கர கிருஷ்ண பிரசாத் சவுத்ரி என்கிற கே.பி. சவுத்ரி. மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து முடித்த பிறகு புனேவில் இருக்கும் Indian Institute of Aeronautical Engineering-ல் வேலை செய்து வந்தார்.
ஒரு நாள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சினிமா படங்களை தயாரிக்கப் போகிறேன் என ஹைதராபாத்திற்கு வந்துவிட்டார். 2016ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் Seetamma Vakitlo Sirimalle Chettu படத்தை விநியோகம் செய்தார்.
Arjun: அர்ஜுன் மகளும், தம்பி ராமையா மகனும் யாரால் சந்தித்து காதலிச்சாங்கனு தெரியுமா?
சினிமா படங்களை தயாரித்தால் நிறைய சம்பாதிக்கலாம் என நினைத்து வந்தார் சவுத்ரி. ஆனால் அவர் நினைத்தது போன்று லாபம் கிடைக்கவில்லை, நஷ்டம் தான் அடைந்தார்.
இதையடுத்தே கோவாவுக்கு ஜாகையை மாற்றினார். அங்கு கிளப் ஒன்றை துவங்கி நடத்தி வந்தார். அங்கு தன் நண்பர்கள், தெலுங்கு திரையுலக பிரபலங்களுடன் சேர்ந்து போதைப் பொருள் பயன்படுத்தியிருக்கிறார்.
கோவாவில் உள்ள நைஜீரிய நாட்டுக்காரரான பெடிட் எபுசரிடம் 100 பாக்கெட் கொகைன் வாங்கி அதை ஹைதராபாத் கொண்டு வந்தார்.
10 பாக்கெட்டுகளை பயன்படுத்திவிட்டு மீதமுள்ள 90 பாக்கெட்டுகளை தன் நண்பர்களுக்கு விற்பனை செய்ய கிளம்பினார். அவர் போதைப் பொருள் வைத்திருப்பது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சவுத்ரியை மடக்கிப் பிடித்து போதைப் பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தார்கள்.
ரஜினியின் கபாலியை தெலுங்கில் வெளியிட்ட தயாரிப்பாளர் கே.பி. சவுத்ரி கைது: 90 பாக்கெட் கொகைன் பறிமுதல்
கே. பி. சவுத்ரியின் பென்ஸ் கார், ரூ. 2.05 லட்சம் ரொக்கம், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் சுரேகா வாணிக்கும், சவுத்ரிக்கும் பழக்கம் உள்ளது என பேச்சு கிளம்பியது. உடனே சவுத்ரியிடம் இருந்து சுரேகாவும் போதைப் பொருள் வாங்கி பயன்படுத்தியிருப்பாரோ என ஆளாளுக்கு பேசினார்கள். இதை பார்த்து நொந்து போன சுரேகா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டார்.