Indian 2: 'இந்தியன் 2' படத்திற்காக கமல் செய்துள்ள காரியம்: வியந்து போன கோலிவுட் வட்டாரம்.!

கமல்
நடிப்பில் தற்போது ‘இந்தியன் 2’ படம் உருவாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்தப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். மேலும், ‘இந்தியன் 2’ படத்தின் அடுத்த பாகமும் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘இந்தியன் 2’ படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற செய்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் மூலம் வியக்க வைக்கும் வெற்றியை படைத்தார் கமல். இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமலின் மார்கெட் வேறலெவலில் எகிறியுள்ளது. இதனையடுத்து நடிப்பு, தயாரிப்பு என படு பிசியாக செயல்பட்டு வருகிறார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசனையும் அவர் தொகுத்து வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனிடையில் ‘இந்தியன் 2’ படத்திலும் நடித்து முடித்துள்ளார் கமல். கடந்த 2020 ஆம் ஆண்டே இந்தப்படம் துவங்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, கொரோனா, லாக்டவுன் போன்ற காரணங்களால் ‘இந்தியன் 2’ ஷுட்டிங் தடைப்பட்டது. இதனால் கமலும், ஷங்கரும் தங்களது அடுத்தடுத்த படங்களில் பிசி ஆனார்கள்.

அதன்பின்னர் லைகா நிறுவனம் நடத்திய பலக்கட்ட பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து ‘இந்தியன் 2’ படம் மீண்டும் துவங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வந்தது. கமல் இந்தியன் தாத்தா கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் சோஷியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற செய்தது. இந்நிலையில் ‘இந்தியன் 2’ படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Nassar: முதல் ஆளாக நான் எதிர்ப்பேன்: பவன் கல்யாண் குற்றச்சாட்டுக்கு நாசர் பதிலடி.!

அதன்படி இந்தப்படத்தில் கமல் பெண் வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அவ்வை சண்முகி, தசாவதாரம் படங்களில் கமல் பெண் வேடத்தில் நடித்தது பெரியவில் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது ‘இந்தியன் 2’ படத்திற்காகவும் கமல் லேடிஸ் கெட்டப் போட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீக்ரெட் தகவல் வலைப்பேச்சு யூடிப் சேனல் மூலம் வெளியாகியுள்ளது. ‘இந்தியன் 2’ படத்தில் கமலுடன் சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘இந்தியன் 2’ படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிரபலமான ஸ்டுடியோவில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

போடு வெடிய.. ‘மரகத நாணயம்’ பார்ட் 2 வருது: மாஸ் தகவலை வெளியிட்ட இயக்குனர்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.