இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. ஆஸ்திரேலியஅணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் கேப்டன் சூர்யகுமார் தலைமையில் களமிறக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சூர்யகுமார் களமிறங்கும் முதல் தொடர் என்றாலும், அதனை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறார். இருப்பினும் அவருக்கு இந்த தொடரில் சூர்யகுமாரின் ஆசை ஒன்று கடைசி வரை நிறைவேறவே இல்லை.
சூர்யகுமாரின் நிறைவேறாத ஆசை
இந்திய அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் களமிறங்கியிருக்கும் சூர்யகுமார், டாஸ் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சேஸிங் ஆட வேண்டும் என்று விரும்பினார். முதல் 20 ஓவர் போட்டியில் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. விசாகப்பட்டனத்தில் நடைபெற்ற அப்போட்டியில் இந்திய அணி முதலில் பவுலிங் செய்து, பின்னர் சேஸிங் செய்தது. அப்போட்டியில் சூர்யகுமாரின் அதிரடி ஆட்டத்தில் 209 ரன்களை இந்திய அணி சேஸ் செய்து அபார வெற்றி பெற்றது.
ஆனால் அதன்பிறகு ஒரு போட்டியில் கூட சூர்யகுமார் ஆசைப்பட்ட மாதிரி டாஸ் விழவே இல்லை. எஞ்சிய நான்கு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூவேட் டாஸ் வெற்றி பெற்று பவுலிங்கை எடுத்தார். இருப்பினும் இந்திய அணி சிறப்பாக ஆடி மூன்றாவது போட்டியை தவிர மற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
கடைசி போட்டியிலும் ஆஸ்திரேலியா டாஸ்
பெங்களுரில் நடைபெறும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5வது 20 ஓவர் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே டாஸ் வெற்றி பெற்று பவுலிங்கை எடுத்திருக்கிறது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக அக்சர் படேலுக்கு பதிலாக தீபக் சஹர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது 20 ஓவர் போட்டியில் அபாரமாக பந்துவீசி ஆட்டநாயகன் விருதை பெற்ற அவர், அவசர மருத்துவ நிலை காரணமாக அணியில் இருந்து வெளியேறியிருக்கிறார் என கேப்டன் சூர்யகுமார் தெரிவித்தார்.