அரசாங்கம் எங்கே ? : அதிதி பாலன் கேள்வி

கடந்த சில நாட்களாக மிக் ஜாம் புயல் காரணமாக சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்களும் கூட வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள் முடங்கினர். அவர்களில் விஷால், கஸ்தூரி உள்ளிட்ட சிலர் இந்த பாதிப்பையும், நிவாரண பணிகளில் அரசாங்கம் வேகமாக செயல்படவில்லை என்பது குறித்த விமர்சனங்களையும் வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகை ‛அருவி' புகழ் அதிதி பாலனும் அரசாங்கம் எங்கே இருக்கிறது என ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், ‛‛நான் திருவான்மியூர் ராதாகிருஷ்ணன் நகருக்குச் சென்றேன். சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை நீரை இந்த ஏரியாவுக்குள் பம்ப் செய்தனர். இறந்து போன இரு விலங்குகள் மிதந்துக் கொண்டிருந்தன. இரண்டு குழந்தைகளையும் அவர்களின் பாட்டியையும் காப்பாற்ற நாங்கள் இதே தேங்கிய தண்ணீரில் நடக்க வேண்டியிருந்தது. மேலும் முதல்வரின் கான்வாய் வருவதாக கூறி அங்கிருந்த எனது காரை உடனடியாக எடுக்குமாறு அதிகாரிகள் நிர்பந்தப்படுத்தினர். வரும்போது கோட்டூர்புரத்தில் ஆறு வீரர்கள் ஒரு மிதவை படகுடன் ஒரு மிகப்பெரிய விஐபியை மீட்பதற்காக புறப்பட்டு சென்றனர். அரசாங்கம் எங்கே இருக்கிறது ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.