புதுடில்லி,’புதுடில்லி தலைமைச் செயலர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகள் முடங்கும் வகையில் செயல்படக் கூடாது’ என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில அரசுக்கும், துணை நிலை கவர்னருக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது.
புதுடில்லி நிர்வாகம் தொடர்பாக துணை நிலை கவர்னருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைமை செயலர் நரேஷ் குமாரின் பதவிக் காலம், கடந்த, 30ம் தேதியுடன் முடிவதாக இருந்தது.
பணி நீக்கம் அல்லது புதிய தலைமைச் செயலர் நியமனத்தில் தங்கள் ஆலோசனையையும், கவர்னர் கேட்க வேண்டும் என, புதுடில்லி அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், தலைமைச் செயலர் நரேஷ் குமாரின் பணிக் காலத்தை மேலும், ஆறு மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
மத்திய அரசின் இந்த உத்தரவு செல்லும் என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தன் உத்தரவில் கூறியிருந்தது.
அதில், ‘தலைமைச் செயலரை மத்திய அரசு நியமித்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனையின்படி அவர் நடக்க வேண்டும். அரசு நிர்வாகம் முடங்கும் வகையில் அவருடைய நடவடிக்கைகள் இருக்கக் கூடாது’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement