Kia Sonet Facelift – 2024 கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் முக்கிய விபரங்கள் வெளியானது

கியா மோட்டார் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான கியா சொனெட்  ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரின் என்ஜின் உட்பட முக்கிய விபர்கள் வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், ஜனவரி மாதம் விலை அறிவிக்கப்படலாம்.

சொனெட் காரில் Tech Line, GT Line மற்றும் X-Line என மூன்று விதமான அடிப்படையில்  HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-Line ஆகிய 7 வேரியண்டுகளில் வரவுள்ளது.

2024 Kia Sonet Facelift

கியா சொனெட் எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என மூன்று என்ஜின்களும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. எனவே, 82 hp பவர் மற்றும் 115Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது 5-ஸ்பீடு மேனுவல் கொடுக்கப்பட்டுள்ளது.

118 hp பவர் மற்றும் 172Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் GDI 6-ஸ்பீடு iMT மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கிடைக்கும். இறுதியாக, 114 hp பவர் மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் 6-ஸ்பீடு iMT மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் வரவுள்ளது.

சொனெட்டில் மொத்தம் 11 விதமான வண்ண விருப்பங்களில் வழங்கப்பட உள்ள நிலையில் புதிய பிவட்ர் ஆலிவ் முதலில் செல்டோஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. வேரியண்ட்டை பொறுத்து, சோனெட் மூன்று விதமான வடிவமைப்பினை பெற்ற புதிய 16-இன்ச் அலாய் வீல் வடிவமைப்புகளின் விருப்பத்தைப் பெற உள்ளது.

அடிப்படையான 6 ஏர்பேக்குகள் பாதுகாப்பு அம்சத்துடன் முதல்நிலை ADAS பாதுகாப்பில் முன்னோக்கி மோதல் எச்சரிக்கை மற்றும் தவிர்க்க உதவி, லேன் கீப் அசிஸ்ட் செயல்பாடு ஆகியவற்றைப் பெறுகிறது.

2024 கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரின் விலை ரூ.8 லட்சத்தில் துவங்க வாய்ப்புகள் உள்ளது.

kia sonet facelift interior teaser Sonet facelift Colours sonet interior

image source – yt-adizone

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.