கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து மாநில அரசுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துடை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சமீப நாட்களாக கேரளா உள்ளிட்ட இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா பரவல் காணப்படுவதை அடுத்து மாநில சுகாதாரத்துறை இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. கோவிட்-19 வழக்குகளின் சமீபத்திய அதிகரிப்பு மற்றும் இந்தியாவில் JN.1 மாறுபாட்டின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளது. […]
