ஹைதராபாத்: 2017ம் ஆண்டு பாகுபலி 2 வெளியாகி நடிகர் பிரபாஸுக்கு உலகளவில் ரசிகர்களை பெற்றுத் தந்தது. ஆனால், அதன் பின்னர் கடந்த 6 வருடங்களாக அவர் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்களுக்கு முதல் நாள் ஓப்பனிங் நல்லா இருந்தாலும் படங்கள் சொதப்பிய நிலையில், வெற்றி கிடைக்காமல் பிரபாஸ் தவித்து வந்தார்.
