மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் உமா சுதர். இவர் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் நிகழ்வு ஒருங்கிணைப்பாளராக (Events Organizer) பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு நண்பர்களுடன் நைட் கிளப்புக்குச் சென்றிருக்கிறார். நள்ளிரவு நைட் கிளப்பிலிருந்து புறப்படும்போது, அங்கு வந்திருந்த ஒரு தம்பதிக்கும், உமா சுதருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அது ஒருகட்டத்தில் கைகலப்பாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, அந்த தம்பதி வேகமாக அவர்களின் காரில் ஏறிப் புறப்பட முயன்றிருக்கிறார்கள்.
⚠️ Horrific visual #Jaipur: Uma Suthar(25) and Raj kumar Jat were run over by a car following a verbal spat with a friend after party at 5.30 am on Tuesday near Malviya Nagar, Jaipur.
The accused driver Mangesh Arora following an argument started hitting the victim with bat,… pic.twitter.com/VvoPgw1TV5
— Saba Khan (@ItsKhan_Saba) December 27, 2023
அப்போது, நண்பர்களுடன் அந்த காரை வழிமறித்த உமா சுதர் மீதும், அவரின் நண்பர் ராஜ் குமார்மீதும், தம்பதியின் கார் டிரைவர் காரை மோதிவிட்டு, உமா சுதர்மீது காரை ஏற்றிச் சென்றிருக்கிறார். இதில், உமா சுதர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் நண்பர் ராஜ் குமார் படுகாயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். இது தொடர்பாக காவல் நிலையத்துக்கும் தகவலளிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக தம்பதிமீது வழக்கு பதிவுசெய்த காவல்துறை, கார் டிரைவர் மங்கேஷ் அரோரா என்பவரைக் கைதுசெய்திருக்கிறது. சம்பவம் தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.