சென்னை: 2024ம் ஆண்டு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்ற வேண்டியதிருப்பதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அழைப்பு விடுக்கிறார். ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஆளுநரை சந்தித்து உரையாடும்படி, முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் இரு தரப்பும் நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக அமர்ந்து பேசும்படி அறிவுறுத்தியது. இந்த நிலையில், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் […]
