சென்னை தமிழகத்தில் இன்று முதல் 9 ஆம் தேதி வரையிலான மழை குறித்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்றும் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதனால் 03.01.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]
