வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: ராமர் கோயில் கட்டுமான பணிக்காக மஹாராஷ்டிரா அரசு ரூ. 11 கோடி நன்கொடை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உ.பி. மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜன.,22ல் நடைபெற உள்ளது. இதற்காக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜெனமபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை செய்து வருகிறது.
இந்நிலையில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்காக மஹாராஷ்டிரா அரசு சார்பில் ரூ. 11 கோடி காசோலையை நன்கொடையாக ஸ்ரீராம் ஜெனமபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலர் சம்பத்ராயிடம் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோயில் கும்பாபிஷகே விழாவில் பங்கேற்பதற்காக மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழு வரும் 21ம் தேதி அயோத்தி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement