இந்தியாவில் 100,000 டெவலப்பர்களுக்கு AI கருவிகள் மற்றும் பயன்பாடுகளில் பயிற்சி அளிக்க AI ஒடிஸி என்ற ஒரு முயற்சியை மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று தொடங்க உள்ளது. இந்த ஒரு மாத கால திட்டத்தில் சேர விருப்பமுள்ள அனைத்து AI ஆர்வலர்களும் aka.ms/AIOdyssey என்ற இணையத்தளத்தில் பதிவு செய்வதன் மூலம் தங்கள் கற்றல் தொகுதிகள் மற்றும் ஆதாரங்களை இலவசமாக அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நிலைகளைக் கொண்ட இந்த பயிற்சி திட்டத்தை ஜனவரி 31, 2024க்குள் முடிக்க வேண்டும். […]
