பொங்கல்: 2.17 லட்சம் மக்கள் அரசு பேருந்துகளில் சொந்த ஊர் பயணம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அரசு சார்பிலும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு 12 மணி நிலவரப்படி 1,260 சிறப்பு பேருந்துகளுடன் மொத்தம் 3,946 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 2,17,030 பயணிகள் சொந்த ஊருக்கு பயணித்துள்ளனர் என்றும் இதுவரை 1,96,310 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.