Kia Seltos diesel gets Manual – ₹ 12 லட்சத்தில் 2024 கியா செல்டோஸ் டீசல் MT விற்பனைக்கு வெளியானது

கியா நிறுவன செல்டோஸ் எஸ்யூவி காரில் 2024 ஆம் ஆண்டிற்கான டீசல் என்ஜினில் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற  5 வேரியண்டுகளை கூடுதலாக விற்பனைக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.18.28 லட்சம் வரை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

செல்டோஸ் எஸ்யூவி 2023 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட்ட பொழுது டீசல் என்ஜின் iMT மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டும் பெற்ற நிலையில் ADAS உள்ளிட்ட பாதுகாப்பு தொகுப்புடன் மேம்பட்டதாக அறிமுகம் செய்யப்பட்டது.

2024 Kia Seltos

செல்டோஸ் காரில் 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு மேனுவல்  மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் வெறும் 11.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற முடியும்.

இதுதவிர இந்த மாடலில் இரண்டு பெட்ரோல் என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரில் மேனுவல் கியர்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது.

Seltos 1.5L Diesel MT Variant Price (INR)

  • 1.5L Diesel MT HTE – ₹ 11,99,900
  • 1.5L Diesel MT HTK – ₹ 13,59,900
  • 1.5L Diesel MT HTK+ – ₹ 14,99,900
  • 1.5L Diesel MT HTX – ₹ 6,67,900
  • 1.5L Diesel MTHTX+ – ₹ 18,27,900

(Ex-showroom)

kia seltos mt gearbox

கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் குறிப்பிடத்தக்க வசதிகளாக  பனோரமிக் சன்ரூஃப்,  17 விதமான பாதுகாப்பு சார்ந்த ADAS 2.0 பாதுகாப்பு அம்சம், டூயல் ஜோன் ஏசி கட்டுப்பாடு மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்டராய்டு ஆட்டோ  ஆகியவற்றை பெறுகின்றது.

கடந்த ஜூலை மாதம் முதல் விற்பனைக்கு கிடைக்கின்ற செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி கார் தற்பொழுது வரை 65,000 எண்ணிக்கையை கடந்துள்ளது. 2024 செல்டோஸ் காரின் விலை ரூ.10.90 லட்சம் முதல் ரூ.20.30 லட்சம் வரை கிடைக்கின்றது.

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.