Demolition of Patel statue, clash between two factions in MP | படேல் சிலை இடிப்பு ம.பி.,யில் இரு பிரிவினர் மோதல்

போபால், மத்திய பிரதேசத்தில், முன்னாள் துணை பிரதமர் வல்லபபாய் படேல் சிலை இடித்து அகற்றப்பட்டதை தொடர்ந்து, இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள உஜ்ஜயின் மாவட்டத்தின் மேக்டோன் பகுதியில் நிறுவப்பட்டிருந்த, முன்னாள் துணை பிரதமர் வல்லபபாய் படேல் சிலையை, சில நபர்கள் டிராக்டரால் மோதி இடித்து தள்ளினர்.

அந்த இடத்தில், சட்டமேதை அம்பேத்கர் சிலையை வைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இது பற்றி அறிந்த மற்றொரு தரப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டனர்.

அப்போது இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கி கொண்டனர். போலீசார் குவிக்கப்பட்டதை அடுத்து, வன்முறை கட்டுக்குள் வந்தது. ஆனாலும், பதற்றமான சூழல் நிலவுகிறது.

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘படேல் சிலை நேற்று முன்தினம் நிறுவப்பட்டது. அந்த இடத்தில் அம்பேத்கர் சிலையை வைக்க விரும்பிய மற்றொரு தரப்பினர், படேல் சிலையை அகற்றியுள்ளனர். இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.