Criminal case against minister for insulting Hindu religion | ஹிந்து மதம் குறித்து அவமதிப்பு அமைச்சர் மீது கிரிமினல் வழக்கு

பெங்களூரு : ஹிந்து மதம் குறித்து, அவமதிப்பாக பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்ய, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெலகாவியில், 2022 நவம்பர் 6ல் நிகழ்ச்சி ஒன்றில், பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி பங்கேற்றார். அப்போது அவர், ‘ஹிந்து என்ற வார்த்தை ஆபாசமான, அழுக்கான என்ற அர்த்தத்தை அளிக்கிறது. ஹிந்து என்பது பர்ஷியன் வார்த்தையாகும்’ என கூறியிருந்தார்.

இதுகுறித்து, அதே ஆண்டு நவம்பர் 9ம் தேதி வக்கீல் திலிப் குமார் என்பவர், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் செய்திருந்தார்.

மனு மீது விசாரணை நடத்தி வந்த நீதிமன்றம், அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்யும்படி, போலீசாருக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.