டில்லி மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் பாஜகவில் இணைகிறார் என்பது போன்ற ஊகங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. சுமார் 77 வயதாகும் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான கமல்நாத். மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா தொகுதியில் இருந்து 9 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார் தற்போது இவரது மகன் நகுல் நாத், இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். தற்போது கமல்நாத் டில்லிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் பா.ஜ.க.வில் சேர போகிறார் என தகவல்கள் வெளிவந்தன. தனது தந்தையுடன் நகுல் நாத்தும், பா.ஜ.க.வில் சேருவார் […]
