ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக கிளம்பியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதும், அவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், இதுகுறித்து தமிழக முதல்வர் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதுவும், பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் நிபந்தனைகளுடன் இலங்கை அரசால் விடுவிக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. இதற்கிடையில், இலங்கை அரசு, கைது செய்யப்படும் […]
