IPL 2024: யார் காரணம்? ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய முகமது ஷமி.. ரசிகர்கள் சோகம்

Mohammed Shami Surgery: ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் முக்கிய அப்டேட் வெளிவந்துள்ளது. இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஐபிஎல்லில் இருந்து வெளியேறினார். அவரது இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டு உள்ளதால், இதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால், அவர் சிகிச்சைக்காக பிரிட்டன் செல்கிறார். இந்தத் தகவலை பிடிஐ செய்தி ஊடகத்திடம் பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

33 வயதான முகமது ஷமி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. அவர் கடைசியாக நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார்.

முகமது ஷமிக்கு அறுவை சிகிச்சை -பிசிசிஐ

பிசிசிஐ வட்டாரம் பிடிஐ ஊடகத்திடம் கூறுகையில், “கணுக்கால் சிகிச்சையாக முகமது ஷமி ஜனவரி கடைசி வாரத்தில் லண்டன் சென்றார். அங்கு மூன்று வாரங்கள் தங்கி மருத்துவ ஆலோசனை பெற்று, மெதுவாக ஓட ஆரம்பித்த பிறகு, அவருக்கு சிறப்பு ஊசி போடலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் அந்த ஊசி வேலை செய்யவில்லை. தற்போது அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே வழி என்று மருத்துவர்கள் கூறியதாக பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ மூத்த நிர்வாகி கூறியதாக பிடிஐ தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், அறுவை சிகிச்சைக்காக ஷமி விரைவில் பிரிட்டன் செல்லவிருப்பதால், இந்த ஐபிஎல் சீசனில் ஷமி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில், ஷுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

 

 
 

 

View this post on Instagram

 

 

 
 
 

 
 

A post shared by(@mdshami.11)

உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய முகமது ஷமி

உலகக் கோப்பையின் 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டார். உலகக் கோப்பை தொடரில் வலியையும் பொருட்படுத்தாமல் அணிக்காக விளையாடினார். 

சமீபத்தில் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. ஷமி ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 229 டெஸ்ட், 195 ஒருநாள் மற்றும் 24 டி20 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் முகமது ஷமியின் பங்களிப்பு

ஐபிஎல் 2023ல் முகமது ஷமியும் சிறப்பாக செயல்பட்டார். ஷமி 17 போட்டிகளில் 18.64 சராசரியில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

முகமது ஷமியின் ஐபிஎல் பயணம் மிகவும் சிறப்பானது. 

ஷமி இதுவரை 110 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் அவர் 26.87 சராசரி மற்றும் 8.44 என்ற எகானமி ரேட்டில் 127 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஷமி ஒரே இன்னிங்ஸில் இரண்டு முறை நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் கூட ஷாமியால் விளையாட முடியாது

முகமது ஷமி ஐபிஎல்லில் இருந்து வெளியேறினாலும், பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான (அக்டோபர்-நவம்பர்) உள்நாட்டில் நடைபெறும் இந்திய டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு அவர் மீண்டும் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு எனக் கூறப்படுகிறது. 

ஒருவேளை ஷமிக்கு அறுவை சிகிச்சை செய்தால், அவரால் டி20 உலகக் கோப்பையில் கூட விளையாட முடியாது என்பது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.