சிவகங்கை முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் பாஜகவுக்குச் சென்றால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் புனிதர்கள் ஆகலாம் எனக் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் மாநிலம் எங்கும் பிரசாரம் தீவிரமாக நடந்த் வருகிறது. அவ்வகையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது ப சிதம்பரம், “பா.ஜ.க.வில் இருக்கும் எல்லோரும் புனிதர்களா? எதிர்க்கட்சியினர் அனைவரும் குற்றவாளிகளா? குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. சாட்சிகளை விசாரித்து நீதிபதி தீர்ப்பளித்த பிறகுதான் ஒருவர் குற்றவாளியாவார். பா.ஜ.க.வில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் யாரும் இல்லையா? எதிர்க்கட்சியில் […]
