இந்திய கிரிக்கெட் அணி ஐபிஎல் தொடர் முடிந்ததும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடுகிறது. இந்தியாவின் மெயின் அணி விளையாடும் இத்தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 04ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு முன்பாக ஜுன் தொடக்கத்தில் இந்திய ஏ அணி அங்கு சென்று விளையாட இருக்கிறது.
இந்த அணியின் சர்ஃப்ராஸ் கான் இடம் பெற்றுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி கடந்த ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் 6 போட்டிகளில் விளையாடிய சர்ஃப்ராஸ் கான், 371 ரன்களை அடித்துள்ளார். இதில் 1 சதமும் 3 அரைசதங்களையும் விளாசி உள்ளார். அதிகபட்சமாக 150 ரன்களை அடித்துள்ளார். இச்சூழலில், இங்கிலாந்து ஏ அணியில் இடம் பெற்றுள்ள அவர், அதில் திறமையை வெளிப்படுத்தி மெயின் அணியில் இடம் பெற முயற்சிப்பார்.
இந்த நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முன்னிட்டு, 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். தனது உடல் தகுதியை மேம்படுத்த அவர், வேகவைத்த காய்கறிகள் மற்றும் சிக்கனை எடுத்துக்கொண்டுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணம் நெருங்குவதால், அவர் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசப்படும் பந்துகளை சமாளிக்க கடுமையாக உழைத்து வருகிறார்.
சர்ஃப்ராஸ் கான் அவரது தந்தை நெளஷாத் கானின் வழிகாட்டுதலின் படி பயிற்சி எடுத்து வருகிறார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததால், வரும் டெஸ்ட் போட்டிகளில் சர்ஃப்ராஸ் கானுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. அளிக்கும் வாய்ப்பில் சர்ஃப்ராஸ் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், அவருக்கு டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
மேலும் படிங்க: “அவர் நினைத்திருந்தால்”.. விராட் கோலி குறித்து முன்னாள் வீரர் சேவாக்!
மேலும் படிங்க: வெயிட் லாஸ் செய்தது எப்படி? நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த ரகசியம்!