இருப்பவருக்கு டெத் சர்டிஃபிகேட்… இல்லாதவருக்கு லைஃப் சர்டிஃபிகேட்! – கலக்கத்தில் கள்ளக்குறிச்சி வருவாய்த் துறையினர்

இறந்தவர்கள் உயிர்பெற்று வருவதை மர்மக் கதைகளில் தான் படித்திருக்கிறோம். ஆனால், உயிரோடு இருப்பவர்கள் இறந்துவிட்டதாகவும், இறந்தவர்கள் உயிரோடு இருப்பது போலவும் சான்றழித்து அந்த மர்மக் கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டிருக்கிறார்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள்!

கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் மூங்​கில்​துறைப்​பட்​டுக் கிரா​மத்​தைச் சேர்ந்​தவர் சுபான் பாய். இவர், ‘நான் நலமாக இருக்​கும் போது நான் இறந்​து​விட்​ட​தாக சங்​க​ராபுரம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் இறப்​புச் சான்​றிதழ் கொடுத்​திருக்​கி​றார்​கள். அதை வைத்து இன்​னொரு​வர் எனது சொத்தை அபகரித்​துள்​ளார். இப்​போது, நான் உயிரோடு இருப்​ப​தாக விஏஓ-​விடம் சான்​றிதழ் பெற்று எனது சொத்தை மீட்க போராடிக் கொண்​டிருக்​கிறேன்’ என மாவட்ட ஆட்​சி​யரிடம் அண்​மை​யில் மனு கொடுத்து அனை​வரை​யும் திகைக்க வைத்​தார்.

இதே​போல், வானாபுரத்தை அடுத்த சிறு​பனையூர் தக்கா கிரா​மத்​தைச் சேர்ந்​தவர் சையத் பக் ஷி மனைவி காதர் பீ. இவர் உயிருடன் நலமாக இருக்​கி​றார். ஆனால், இதே கிரா​மத்​தைச் சேர்ந்த ரகுமத்​துல்லா என்​பவர், காதர் பீ இறந்​து​விட்​ட​தாக வரு​வாய் துறை​யில் போலி​யாக இறப்​புச் சான்​றிதழ் பெற்று இவரது சொத்தை அபகரித்​துள்​ளார். இதையறிந்து பதறிப்​போன காதர் பீ, ‘நான் உயிரோடு இருக்​கும்​போது, எப்​படி இறப்​புச் சான்று அளித்​தீர்​கள்?’ எனக் கேட்​டு, சங்​க​ராபுரம் வட்​டாட்​சி​யர் அலு​வலக வாசலில் கழுத்​தில் மாலை அணிந்து கொண்டு பிணம் போல் படுத்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டார்.

இதையெல்​லாம் தூக்​கிச் சாப்​பிடுமளவுக்கு இன்​னொரு சம்​பவ​மும் நடந்​துள்​ளது. உளுந்​தூர்​பேட்டை வட்​டம் வெள்​ளை​யூர் கிரா​மத்​தைச் சேர்ந்​தவர் கோவிந்​த​சாமி. இவர் நெய்​வேலி டவுன் ஷிப்​பில் வேலை செய்​து​வந்த நிலை​யில் 2016-ல் இறந்​து​விட்​டார். இவரது இறப்​பைப் பதிவு செய்து என்​எல்சி டவுன் ஷிப் நிர்​வாகம் இறப்​புச் சான்​றிதழும் வழங்​கி​யுள்​ளது. ஆனால், கோவிந்​த​சாமி 2023-ல் தனக்​குச் சொந்​த​மான நிலத்தை ஆறு​முகம் என்​பவ​ருக்கு உளுந்​தூர்​பேட்டை சார் பதி​வாளர் அலு​வல​கத்​தில் பத்​திரப்​ப​திவு செய்து கொடுத்​த​தாக ஆவணங்​களை வைத்​திருக்​கி​றார்​கள். 7 ஆண்​டு​களுக்கு முன்பே இறந்து போன​வர் எப்​படி உயிரோடு வந்து பத்​திரப் பதிவு செய்து கொடுத்​தார் என்ற கோணத்​தில் இப்​போது விசா​ரணை நடந்து வரு​கிறது.

இதெல்​லாம் ஒரு​புறமிருக்க, 20 வருடங்​களுக்கு முன்​னர் இறந்​து​விட்ட மாராசிரியர் என்​பவ​ருக்கு இறப்​புச் சான்​றிதழ் கேட்டு அவரது வாரிசு​தா​ர​ரான விஜயலட்​சுமி ஓராண்​டாக அலைந்து கொண்​டிருக்​கி​றார். பிறப்​பு, இறப்பு பதிவு மற்​றும் சான்​றிதழ்​கள் வழங்​கு​வ​தில் அரசு கண்​டிப்​பான விதி​முறை​கள் அமலில் வைத்​திருந்​தா​லும் அதையெல்​லாம் பைபாஸ் செய்​து​விட்டு வரு​வாய்த் துறை​யினரைக் கைக்​குள் போட்​டுக் கொண்டு சிலர் இப்​படி புகுந்து விளை​யாடு​கி​றார்​கள்.

இன்​னும் சில இடங்​களில் வரு​வாய்த் துறை​யினருக்​குத் தெரி​யாமலேயே போலி ஆவணங்​களை தயார் செய்​தும் மோசடி​யில் ஈடு​பட்டு வரு​கி​றார்​கள். மேற்​சொன்ன சம்​பவங்​களில் காதர் பீ என்​பவ​ருக்கு அளிக்​கப்​பட்ட இறப்​புச் சான்று தொடர்​பான சர்ச்​சை​யில் சிக்கி வட்​டாட்​சி​யர் சசிகலா இடமாற்​றம் செய்​யப்​பட்​டார்.

அவரிடம் இதுகுறித்து கேட்​ட​போது, “அந்​தச் சான்​றிதழ் எப்​படி வழங்​கப்​பட்​டது எனத் தெரிய​வில்​லை. இது தொடர்​பாக வானாபுரம் வட்​டாட்​சி​யர் வெங்​கடேசன் தான் கோட்​டாட்​சி​யருக்கு அறிக்கை அனுப்​பி​னார். அவரிடமே கேளுங்​கள்” என்​றார்.வானாபுரம் வட்​டாட்​சி​யர் வெங்​கடேசனிடம் கேட்​டதற்​கு, “சங்​க​ராபுரம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் தான் காதர் பீக்கு இறப்​புச் சான்​றிதழ் வழங்​கி​யுள்​ளனர். ஆனால், புதி​தாக உரு​வாக்​கப்​பட்ட வானாபுரம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​துக்கு அந்த ஃபைலை தள்​ளி​விட்​டுள்​ளனர்.

இந்​தப் பிரச்​சினை தொடர்​பாக தலை​மை​யிடத்து துணை வட்​டாட்​சி​யர் சண்​முகம் விசா​ரணை நடத்தி கோட்​டாட்​சி​யருக்கு அறிக்கை அனுப்​பி​யுள்​ளார்” என்​றார். நாம் சண்​முகத்தை தொடர்பு கொண்டு இது விஷய​மாக விசா​ரித்த போது, “நான் இந்த சீட்​டுக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. அதனால் இந்​தப் பிரச்​சினை குறித்து எனக்கு முழு​மை​யாக எது​வும் தெரிய​வில்​லை” என்று தன் பங்​கிற்கு நழு​விக்​கொண்​டார்.

இதனிடையே, போலி​யாக இறப்பு மற்​றும் பிறப்​புச் சான்​றிதழ்​களை தயா​ரித்​தும், துணை வட்​டாட்​சி​யரின் போலி முத்​திரைகளை தயார் செய்​தும் மோசடி​யாக சொத்து மாற்​றம் செய்​த​தாக சங்​க​ராபுரத்தை அடுத்த புத்​தி​ராம்​பட்டு கிரா​மத்​தைச் சேர்ந்த சுப்​பிரமணி என்​பவர் மீது சங்​க​ராபுரம் வட்​டாட்​சி​யர் விஜயன் போலீ​ஸில் புகாரளித்​தார். இதையடுத்து சங்​க​ராபுரம் போலீ​ஸார் சுப்​பிரமணி​யிடம் விசா​ரணை நடத்தி அவரைக் கைது செய்​தனர்.

இது தொடர்​பாக நம்​மிடம் பேசிய தமிழ் மாநில வரு​வாய்த்​துறை அலு​வலர் சங்​கத்​தின் கள்​ளக்​குறிச்சி மாவட்​டச் செய​லா​ளர் கமலக்​கண்​ணன், “அனைத்து கோப்​பு​களும் துணை வட்​டாட்​சி​யர் மூலம்​தான் வட்​டாட்​சி​யருக்​குச் செல்​லும். எனவே இந்த விஷ​யத்​தில் வரு​வாய்த்​துறை​யினர் தவறு செய்ய வாய்ப்​பில்​லை. துறைக்கு சம்​பந்​தமில்​லாத நபர்​கள் தான் போலி​யாக சான்​றிதழ்​கள் மற்​றும் வரு​வாய்த்​துறை முத்​திரைகளை தயார் செய்து இப்​படி சொத்​துகளை அபகரிக்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்​டிருக்க வேண்​டும்” என்று வரு​வாய்த் துறை​யினருக்கு வக்காலத்து வாங்கினார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.