மிகவும் சரியானவராக இருந்ததால் விவாகரத்து செய்தேன்; பிரபல கால்பந்து வீரரின் முன்னாள் மனைவி கூறிய காரணம்

பிரேசிலா, பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சாண்டோஸ் லெய்டே. இவரை காகா என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். 2002ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியில் காகா இடம்பெற்றிருந்தார். 2006ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரிலும் இவர் இடம்பெற்றிருந்தார். அதன்பின்னர் 2017ம் ஆண்டு காகா கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார். இதனிடையே, காகா தனது சிறுவயது தோழியும், காதலியுமான கரோலின் சிலிகோவை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்தார். 10 ஆண்டுகள் சேர்ந்து … Read more

இஸ்ரேல்- ஈரான் இடையே போர் பதற்றம்: இந்திய வெளியுறவுத்துறை கருத்து

புதுடெல்லி சிரியாவின் டமாஸ்கசில் இஸ்ரேல் அண்மையில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், அங்குள்ள ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்தது. இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இஸ்ரேல் மீது ஈரான் கடுங்கோபத்தில் உள்ளது. இந்த தாக்குதலையடுத்து எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று பதற்றம் நிலவி வந்தது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என அச்சம் ஏற்பட்டதால் மறு உத்தரவு வரும்வரை இந்தியர்கள் இஸ்ரேல், ஈரான் சுற்றுலா … Read more

அவர்கள் இருவரும் எங்கள் அணியுடன் இருப்பது நன்றாக உள்ளது – சஞ்சு சாம்சன்

சண்டிகர், ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் திரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா 31 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் கேஷவ் மகராஜ் மற்றும் அவேஷ் … Read more

இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்; மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம்

டெல் அவிவ், காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. எஞ்சிய பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. … Read more

சல்மான்கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு- மும்பையில் பரபரப்பு

மும்பை, பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள சல்மான் கான் வீடு மும்பை பாந்த்ராவில் அமைந்துள்ளது. இன்று அதிகாலை ஐந்து மணியளவில் இவரது வீட்டு முன் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுள்ளனர். சத்தம் கேட்டு உடனடியாக வீட்டில் இருந்த காவலாளிகள் வெளியே வந்து பார்த்தபோது அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதுதொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக … Read more

இந்தியா வென்ற 2013 சாம்பியன்ஸ் டிராபி ஒரு கோப்பையே கிடையாது – மைக்கேல் வாகன் அதிருப்தி

புதுடெல்லி, சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா கடைசியாக எம்.எஸ். தோனி தலைமையில் 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. ஆனால் அதன் பின் கடந்த பத்து வருடங்களாக ஒரு ஐ.சி.சி. கோப்பையை கூட வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது. ஐ.சி.சி. தொடர்களில் லீக் சுற்றில் அபாரமாக விளையாடும் இந்தியா அழுத்தமான நாக் அவுட் சுற்றில் தோல்வியை சந்தித்து கோப்பைகளை எதிரணிக்கு தாரை வார்த்து வருகிறது. குறிப்பாக கடந்த வருடம் சொந்த மண்ணில் நடந்த 2023 … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா புறப்பட்ட சரக்கு கப்பலை சிறைபிடித்த ஈரான்: அதிகரிக்கும் பதற்றம்

தெஹ்ரான், காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. எஞ்சிய பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. அதேவேளை … Read more

'இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்' பிரதமர் மோடி தமிழில் பதிவு

புதுடெல்லி, சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சோப கிருது ஆண்டு விடைபெற்று ‘குரோதி’ புத்தாண்டு இன்று பிறந்துள்ளது. தமிழ்புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மோடி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ் கலாச்சாரத்தின் துடிப்பான மரபுகள் மற்றும் ஆழமான பாரம்பரியத்தின் வெளிப்பாடாக திகழும் புத்தாண்டு வாழ்த்துகள். … Read more

டி20 உலக கோப்பை: துபேவை தேர்வு செய்வது உங்கள் விருப்பம்…ஆனால் இந்தியா வெல்ல அதை செய்ய வேண்டும் – பிளெமிங்

சென்னை, 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. அதில் 2007-க்கு பின் இம்முறையாவது இந்தியா டி20 உலக கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா கடந்த 10 வருடமாக ஒரு ஐ.சி.சி. கோப்பையை கூட வெல்ல … Read more

'இஸ்ரேல்-ஈரான் மோதலால் உலகப்போர் ஏற்படும் அபாயம்' – டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் 3 முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் விரைவில் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இஸ்ரேல்-ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான … Read more