மகளிர் ஆணையத் தலைவிக்கு பாலியல் துன்புறுத்தல் – கார் டிரைவர் கைது

புதுடெல்லி: டெல்லி மகளிர் ஆணையத் தலைவராக இருப்பவர் ஸ்வாதி மாலிவால். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது; டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, போதையில் இருந்த கார் டிரைவர் ஒருவர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். காரில் தப்பிக்க முயன்ற அவரை பிடிக்க முற்பட்டபோது எனது கை அந்த காரின் ஜன்னல் கதவில்மாட்டிக் கொண்டது. இதையடுத்து,காருடன் 10-15 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டேன்.மகளிர் ஆணையத் தலைவிக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மற்ற பெண்கள் எவ்வளவு … Read more

நியூஸி. பிரதமர் ஜெசிந்தா ராஜினாமா முடிவு செய்திக்கு தரக்குறைவான தலைப்பு: மன்னிப்புக் கோரிய பிபிசி

லண்டன்: நியூஸிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வியாழன் அன்று தெரிவித்தார். அதனை உலக செய்தி நிறுவனங்கள் செய்தியாக வெளியிட்டன. உலக அளவில் கவனம் பெற்ற செய்தி நிறுவனமான பிபிசியும் இது குறித்து செய்தி வெளியிட்டது. ஆனால், அது பாலியல் பாகுபாட்டுடன் கூடிய தரக் குறைவான தலைப்பை வைத்து சர்ச்சையில் சிக்கியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிபிசி தரப்பு மன்னிப்பு கோரியுள்ளது. “Can women have it … Read more

‘ஆளுநரை ஒருமையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்புக் கோர வேண்டும்’ – தமிழக பாஜக செயற்குழுவில் தீர்மானம்

கடலூர்: ‘தமிழக ஆளுநரை ஒருமையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்ற கடலூரில் நடைபெற்ற பாஜக மாநில செற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் இன்று கடலூரில் கட்சியின் மாநிலத் தலைவர் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் பி.செல்வம் வரவேற்றார். அதைத் தொடர்ந்து கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ”உலகப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் நாடாக இந்தியாவை உருவாக்கி பெருமை சேர்த்து, காசி … Read more

மத்திய அரசு மீது முதல்வர் மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: ஓபிசி, சிறுபான்மையினருக்கான உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்திவிட்டது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்குவங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி), சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் மேதாஸ்ரீ திட்டம் அலிபூர்தரில் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்வர் மம்தா தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசும்போது, “ஓபிசி, சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை திட்டங்களை மத்திய அரசு நிறுத்திவிட்டது. மேற்குவங்க அரசு அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும். … Read more

Quiet Mode | இன்ஸ்டாவில் ‘அமைதியோ அமைதி’ அம்சம் அறிமுகம்

கலிபோர்னியா: மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் தளத்தில் ‘Quiet Mode’ என்றொரு புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது இளம் வயது பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதியதொரு அம்சம் என சொல்லப்படுகிறது. மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-இல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா (அப்போது பேஸ்புக்) அதனை கையகப்படுத்தியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியன் ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் … Read more

டாஸ்மாக் கடைகள் அரை மணி நேரம் முன்பாக அடைக்கப்படுமா? – அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே அடைப்பது குறித்து விளக்கம் அளிக்க அரசுத் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், “டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் ஆகியவை தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. இந்நிலையில், கடை மூடப்படும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள், மதுபானக் கடைகளின் முன்பும், சாலையோரத்திலும், அருகில் உள்ள பொது இடங்களிலும் … Read more

செகந்திராபாத் ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து – தீயை அணைக்க 9 மணி நேரம் போராட்டம்

செகந்திராபாத்: தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் நேற்று காலை 11 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து நேற்றிரவு 8 மணி வரை கூட முற்றிலுமாக கட்டுப்பாட்டில் வரவில்லை. இதில் 4 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பலர் தீ விபத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. செகந்திராபாத் நல்லகுட்டா டெக்கான் நைட் வேர் ஸ்போர்ட்ஸ் ஷாப்பிங் மாலில் நேற்று காலை 11 மணிக்கு திடீரெனதீப்பற்றியது. கீழ் தளத்தில் தீ பரவியதால், மக்கள் பதற்றத்துடன் வெளியே ஓடி வந்தனர். … Read more

கோகுல்ராஜ் வழக்கு: கோயிலில் பதிவான சிசிடிவி காட்சிகளை முறையாக போலீஸ் ஆய்வு செய்யவில்லை என வாதம்

சென்னை: திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் முறையாக ஆய்வு செய்யவில்லை என கோகுல்ராஜ் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேரில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதியிடம் விசாரித்தபோது வீடியோ காட்சிகளை ஒளிபரப்பிய … Read more

லீனா மணிமேகலைக்கு எதிரான வழக்குகள்: நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை 

புதுடெல்லி: ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், மத்திய அரசின் லுக்அவுட் நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் லீனா மணிமேகலை, தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்தாண்டு ஜூலை மாதம் காளி என்ற ஆவணப்பட போஸ்டரை வெளியிட்டார். அந்த போஸ்டரில், கையில் சிகரெட்டுடன் காளி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த போஸ்டருக்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் … Read more

கரூர் | ரயில் பயணத்தில் குழந்தைக்கு திடீர் உடல்நல பாதிப்பு: ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு

கரூர்: ரயில் பயணத்தின்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கரூர் ரயில் நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு குழந்தை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள திருச்சுழியைச் சேர்ந்தவர் சஞ்சீவி (30). இவர் மனைவி பொன்னரசி (25). இவர்களுக்கு சஹானா என்ற ஒன்றரை வயது பெண்குழந்தை உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சஞ்சீவி பணியாற்றி வருகிறார். பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக குடும்பத்துடன் சொந்தஊர் சென்ற குமரன் விடுமுறை முடிந்து … Read more