இந்திய ஒற்றுமை யாத்திரையில் பாதுகாப்பு பிரச்சினை ஏதுமில்லை: ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்

ஸ்ரீநகர்: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீரில் நடைபெறுவதில் பாதுகாப்பு பிரச்சினை ஏதும் இல்லை என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையின் கடைசி கட்டம் தற்போது ஜம்மு காஷ்மீரில் தொடங்கி இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை பல்வேறு மாநிலங்கள் வழியாகச் சென்று பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீருக்குள் நேற்று … Read more

புதுச்சேரி மாநில அந்தஸ்து எதிர்ப்பை பாஜக மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அதிமுக

புதுச்சேரி: “மாநில அந்தஸ்து எதிர்ப்புக் கருத்தை பாஜக மறுபரிசீலனை செய்ய வேண்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தை உடனடியாக அதன் தலைவரான முதல்வர் ரங்கசாமி கூட்ட வேண்டும்” என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலரும், இபிஎஸ் ஆதரவாளருமான அன்பழகன் கூறியுள்ளார். புதுச்சேரி மாநில அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மத்தியில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் – பாஜக எப்போது ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. புதுச்சேரிக்கு … Read more

உ.பி. இந்து கல்லூரியில் பர்தா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு – போலீஸார் தலையிட்டு போராட்டத்தை முடித்து வைத்தனர்

புதுடெல்லி: உ.பி.யின் பரேலியில் எம்.ஜே.பி. ரோஹில்கண்ட் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றாக, முராதாபாத்தின் இந்து கல்லூரி உள்ளது. முஸ்லிம்கள் அதிகமுள்ள முராதாபாத்தில் அமைந்த இக்கல்லூரியில் பல மாணவிகள் அன்றாடம் தங்கள் வகுப்புகளுக்கு பர்தா அணிந்து வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் இக்கல்லூரியில் மாணவர்கள் அனைவருக்கும் ஜனவரி 1 முதல் புதிதாக சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முஸ்லிம் மாணவிகள் சிலர் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இவர்கள் கல்லூரி காவலர்களால் நுழைவாயிலில் … Read more

இந்திய எல்லையை ஒட்டி இருக்கும் சீன படையினர் மத்தியில் அதிபர் ஜி ஜின்பிங் உரை – விழிப்புடன் இருக்க உத்தரவு

பெய்ஜிங்: இந்திய எல்லையை ஒட்டி இருக்கும் படைகளுடன் உரையாற்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங், போருக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ”இந்திய – சீன எல்லையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் வீரர்களுடன் காணொலி காட்சி வாயிலாக அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றினார். ஜின்ஜியாங் மாகாண ராணுவ தலைமையின் கீழ் இயங்கும் பகுதியான குன்ஜெராப் எனும் எல்லைப் பகுதியில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் … Read more

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரத்தில் ஆளும் கூட்டணியில் முரண்பாடு: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: “புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் ரங்கசாமிக்கும், பாஜகவுக்கும் முரண்பாடு உள்ளது. இரு தரப்பும் மக்களை ஏமாற்றுகின்றனர்” என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி வந்த சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை மனு தந்துள்ளது சரியானதுதான். ஆனால், மாநில அந்தஸ்து தர ஆலோசனை தருமாறு நீதிபதிகளிடம் ஆலோசனை தெரிவிக்குமாறு முதல்வர் கூறியுள்ளது புரியாத … Read more

லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவம் – மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன் வழங்க உ.பி. அரசு எதிர்ப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேசம் லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில், மத்தியஅமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. உத்தர பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் திகுனியா என்ற இடத்தில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடந்தது. அப்போது இந்த கூட்டத்துக்குள், வேகமாக வந்த வாகனம் ஒன்று உள்ளே புகுந்தது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் … Read more

“இந்தியாவால்தான் ஓரளவு மீண்டோம்” – நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இலங்கை

கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை ஓரளவு மீண்டிருப்பதற்கு இந்தியாவின் உதவியே மிக முக்கிய காரணம் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, ஜெய்சங்கரும், அலி சப்ரியும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அலி சப்ரி, ”நாங்கள் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில், … Read more

கனிம வளங்களை கொண்டு அரசின் வருவாயை அதிகரிக்க திட்டமிட்டிருப்பது தவறானது: வேல்முருகன்

சென்னை: கனிம வளங்களை கொண்டு அரசின் வருவாயை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பது தவறான முடிவு என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கடற்கரையோர கனிமவளத்தை வணிக ரீதியில் பிரித்தெடுத்து சந்தைப்படுத்த, தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கும், ஒன்றிய அரசின் ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் முன்னிலையில் சமீபத்தில் கையெழுத்தானது. அதன் அடிப்படையில், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் கடற்கரையோர கனிம வளங்களை குறிப்பாக, கார்னட், இலுமினைட், … Read more

புறப்பாடு நேரம் மாற்றம் | 30-க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்தை தவறவிட்டனர்: ஸ்கூட் நிறுவனத்துக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரிலிருந்து சிங்கப்பூருக்கு, அந்நாட்டைச் சேர்ந்த ஸ்கூட் நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுகிறது. இதில் பயணம் செய்ய சுமார் 300 பேர் டிக்கெட் எடுத்திருந்தனர். இந்த விமானம் நேற்று முன்தினம் இரவு 7.55 மணிக்கு புறப்பட வேண்டும். ஆனால், இதன் புறப்படும் நேரம் நேற்று முன்தினம் மாலை 4 மணி என மாற்றப்பட்டது. இதை ஸ்கூட் விமான நிறுவனம், சம்பந்தப்பட்ட பயணிகளுக்கும், டிராவல் ஏஜென்டுகளுக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டது. ஆனால் ஒரு டிராவல் ஏஜென்சிமட்டும், … Read more

இடைத்தேர்தல் வெற்றியில் வாக்கு வித்தியாசத்தைப் பொறுத்திருந்து பாருங்கள்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறோம் என பொறுத்திருந்து பாருங்கள் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் 2ம் நாள் நேர்காணல் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த சட்ட மசோதாவை முதல்வர் … Read more