செகந்திராபாத் ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து – தீயை அணைக்க 9 மணி நேரம் போராட்டம்

செகந்திராபாத்: தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் நேற்று காலை 11 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து நேற்றிரவு 8 மணி வரை கூட முற்றிலுமாக கட்டுப்பாட்டில் வரவில்லை. இதில் 4 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பலர் தீ விபத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. செகந்திராபாத் நல்லகுட்டா டெக்கான் நைட் வேர் ஸ்போர்ட்ஸ் ஷாப்பிங் மாலில் நேற்று காலை 11 மணிக்கு திடீரெனதீப்பற்றியது. கீழ் தளத்தில் தீ பரவியதால், மக்கள் பதற்றத்துடன் வெளியே ஓடி வந்தனர். … Read more

கோகுல்ராஜ் வழக்கு: கோயிலில் பதிவான சிசிடிவி காட்சிகளை முறையாக போலீஸ் ஆய்வு செய்யவில்லை என வாதம்

சென்னை: திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் முறையாக ஆய்வு செய்யவில்லை என கோகுல்ராஜ் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேரில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதியிடம் விசாரித்தபோது வீடியோ காட்சிகளை ஒளிபரப்பிய … Read more

லீனா மணிமேகலைக்கு எதிரான வழக்குகள்: நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை 

புதுடெல்லி: ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், மத்திய அரசின் லுக்அவுட் நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் லீனா மணிமேகலை, தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்தாண்டு ஜூலை மாதம் காளி என்ற ஆவணப்பட போஸ்டரை வெளியிட்டார். அந்த போஸ்டரில், கையில் சிகரெட்டுடன் காளி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த போஸ்டருக்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் … Read more

கரூர் | ரயில் பயணத்தில் குழந்தைக்கு திடீர் உடல்நல பாதிப்பு: ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு

கரூர்: ரயில் பயணத்தின்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கரூர் ரயில் நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு குழந்தை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள திருச்சுழியைச் சேர்ந்தவர் சஞ்சீவி (30). இவர் மனைவி பொன்னரசி (25). இவர்களுக்கு சஹானா என்ற ஒன்றரை வயது பெண்குழந்தை உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சஞ்சீவி பணியாற்றி வருகிறார். பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக குடும்பத்துடன் சொந்தஊர் சென்ற குமரன் விடுமுறை முடிந்து … Read more

ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்தம்

மும்பை: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் – ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்தம் ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்றது. இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டில்லாவில் குஜராத் மாநில பாரம்பரியப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. #WATCH | The Ambani family dances … Read more

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு | இலங்கை 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த இந்தியா வலியுறுத்தல்

கொழும்பு: இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ”அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இலங்கை வலுவாக இருப்பதை இந்தியா எப்போதுமே ஆதரித்து வருகிறது. அதிகாரப் பகிர்வு தொடர்பான கேள்விக்கு அதிபர் … Read more

விக்கிரவாண்டி வேல்ஸ் உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல தடை: அமைச்சர் சிவசங்கர் உத்தரவு

சென்னை: “விக்கிரவாண்டி அருகே சாலைகள் இருபுறமும் உள்ள வேல்ஸ் உணவகம் பயணிகளுக்கு சுகாதாரமற்ற முறையில் தரமற்ற உணவு மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் வழங்கியது கண்டறியப்பட்டதன் அடிப்படையில், வேல்ஸ் உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் உரிமம் ரத்து செய்யப்படுகிறது” என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமீப காலமாக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நிறுத்தம் செய்யும் பயண வழி உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமற்ற உணவுகள் … Read more

“ஆதிசங்கரருக்குப் பிறகு…” – ராகுல் காந்தியை புகழ்ந்த ஃபரூக் அப்துல்லா

லகான்பூர் (ஜம்மு காஷ்மீர்): ஆதிசங்கரருக்குப் பிறகு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டவர் ராகுல் காந்திதான் என்று ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா பாராட்டு தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. லகான்பூர் என்ற இடத்தில் நடைபெற்ற யாத்திரையில் ராகுல் காந்தியுடன் ஃபருக் அப்துல்லா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ”பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் … Read more

இரட்டை இலை சின்னத்தை விடமாட்டோம்: ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி

சென்னை: “சின்னம் எங்களிடம் இருப்பதால்தான் அவர்கள் சின்னம் இல்லாமல் சாலையில் அலைகின்றனர். அந்தப் பேச்சுக்கு இடமே இல்லை. இரட்டை இலையை விடவே மாட்டோம். அதற்கான பட்டா வைத்திருப்பவர் ஓ.பன்னீர்செல்வம்தான்” என்று அவரது ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர் புகழேந்தி வெள்ளிக்கிழமை (ஜன.20) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “எடப்பாழி பழனிசாமி, தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் நான் இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அந்தக் … Read more

பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்

புதுடெல்லி: விமானத்தில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்ததாக எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு டிஜிசிஏ எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. டிஜிசிஏ விதிமுறைகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த விமானத்தை இயக்கிய தலைமை விமானியின் உரிமத்தை 3 மாதங்கள் ரத்து செய்துள்ளது. விமான சட்டத்தின் 141-வது விதியின் கீழ் தனது கடமையைச் … Read more