பழங்குடியின மக்கள் வெளியே வந்து நல்ல பண்பாட்டை வளர்த்து, தங்களை உயர்த்தி கொள்ள வேண்டும் – முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: பழங்குடியின மக்கள் வெளியே வந்து மற்றவர்களுடன் பழகி நல்ல பண்பாட்டை வளர்த்து தங்களை உயர்த்தி கொள்ள வேண்டுமெனபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி நேரு யுவகேந்திரா சார்பில் பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. நேரு யுவகேந்திரா துணை இயக்குநர் தெய்வசிகாமணி வரவேற்றார். புதுச்சேரி அமைச்சர் லட்சுமிநாராயணன், நேரு யுவகேந்திரா தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு … Read more

12,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் கூகுள் – முழு பொறுப்பு ஏற்பதாக சுந்தர் பிச்சை அறிவிப்பு

நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடர்ந்து கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. உலகம் முழுவதும் பணிபுரியும் கூகுள் ஊழியர்கள் இதன்மூலம் வேலை இழக்கின்றனர். இது கூகுளின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 6 சதவீதம் ஆகும். பணிநீக்கம் தொடர்பாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை சார்பில் சம்பந்தப்பட்ட 12,000 ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் பணிநீக்கம் தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் பிளாக் பக்கத்தில் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ள தகவலில், “உங்களிடம் பகிர்ந்துகொள்ள சில கடினமான செய்திகள் … Read more

ராஜபாளையம் அருகே விதிமீறலில் ஈடுபட்ட இரு பட்டாசு ஆலைகளுக்கு சீல்

சிவகாசி: சிவகாசி, வெம்பக்கோட்டை பகுதிகளில் உள்ள இரு பட்டாசு ஆலைகளில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து நேற்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உற்பத்தியை நிறுத்தி பாதுகாப்பு நாளாக கடைபிடித்து சுய ஆய்வு மேற்கொண்டனர். அதேநேரம் வருவாய்த்துறை நடத்திய ஆய்வில் ராஜபாளையம் அருகே விதிமீறலில் ஈடுபட்ட இரு பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மத்திய மாநில அரசுகளின் அனுமதி பெற்று 1070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு கடைபிடிக்க … Read more

உதயநிதி ஸ்டாலினை சந்தித்த மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் – மதுரை அதிமுகவில் சர்ச்சை

மதுரை: அதிமுக மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா, நேற்று முன்தினம் மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த சம்பவம், அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தவரை அதிமுகவினரும், திமுகவினரும் நெருங்கிய உறவினர்களாக இருந்தால் கூட ஒருவர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மற்றவர்கள் போவதில்லை. அந்தளவுக்கு அதிமுகவினரை பொறுத்தவரையில் அவர்கள் கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் திமுகவினருடன் நெருக்கமாக இருப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தற்போதும் அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட … Read more

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு இதுவரை செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? – மா.சுப்பிரமணியன் விளக்கம் 

சென்னை: “2021-22 மற்றும் 2022-23 ஆம் நிதியாண்டுகளில் தமிழ்நாடு அரசால் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொற்றா நோய்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு தவிர, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கீடாக ரூ.681.64 கோடி வழங்கப்பட்டு, இதுவரை ரூ.407.06 கோடி செலவிடப்பட்டுள்ளது” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களைத் தேடி மருத்துவம்” (MTM) திட்டத்தை பற்றி சமீபத்தில் நாளிதழ்களில் … Read more

தமிழகத்தில் 100% தாழ்தள பேருந்துகளை இயக்க முடியாதது ஏன்? – உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் 

சென்னை: “நூறு சதவீத தாழ்தள பேருந்துகளை இயக்க வேண்டும் என்றால், அதற்குரிய வகையில் பேருந்து நிறுத்தங்களை மேம்படுத்த வேண்டும். மழைக் காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீர் தாழ்தள பேருந்துக்குள் புகுந்து விடும்” என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த … Read more

மகளிர் ஆணையத் தலைவிக்கு பாலியல் துன்புறுத்தல் – கார் டிரைவர் கைது

புதுடெல்லி: டெல்லி மகளிர் ஆணையத் தலைவராக இருப்பவர் ஸ்வாதி மாலிவால். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது; டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, போதையில் இருந்த கார் டிரைவர் ஒருவர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். காரில் தப்பிக்க முயன்ற அவரை பிடிக்க முற்பட்டபோது எனது கை அந்த காரின் ஜன்னல் கதவில்மாட்டிக் கொண்டது. இதையடுத்து,காருடன் 10-15 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டேன்.மகளிர் ஆணையத் தலைவிக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மற்ற பெண்கள் எவ்வளவு … Read more

நியூஸி. பிரதமர் ஜெசிந்தா ராஜினாமா முடிவு செய்திக்கு தரக்குறைவான தலைப்பு: மன்னிப்புக் கோரிய பிபிசி

லண்டன்: நியூஸிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வியாழன் அன்று தெரிவித்தார். அதனை உலக செய்தி நிறுவனங்கள் செய்தியாக வெளியிட்டன. உலக அளவில் கவனம் பெற்ற செய்தி நிறுவனமான பிபிசியும் இது குறித்து செய்தி வெளியிட்டது. ஆனால், அது பாலியல் பாகுபாட்டுடன் கூடிய தரக் குறைவான தலைப்பை வைத்து சர்ச்சையில் சிக்கியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிபிசி தரப்பு மன்னிப்பு கோரியுள்ளது. “Can women have it … Read more

‘ஆளுநரை ஒருமையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்புக் கோர வேண்டும்’ – தமிழக பாஜக செயற்குழுவில் தீர்மானம்

கடலூர்: ‘தமிழக ஆளுநரை ஒருமையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்ற கடலூரில் நடைபெற்ற பாஜக மாநில செற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் இன்று கடலூரில் கட்சியின் மாநிலத் தலைவர் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் பி.செல்வம் வரவேற்றார். அதைத் தொடர்ந்து கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ”உலகப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் நாடாக இந்தியாவை உருவாக்கி பெருமை சேர்த்து, காசி … Read more

மத்திய அரசு மீது முதல்வர் மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: ஓபிசி, சிறுபான்மையினருக்கான உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்திவிட்டது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்குவங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி), சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் மேதாஸ்ரீ திட்டம் அலிபூர்தரில் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்வர் மம்தா தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசும்போது, “ஓபிசி, சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை திட்டங்களை மத்திய அரசு நிறுத்திவிட்டது. மேற்குவங்க அரசு அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும். … Read more