உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் குறைப்பு: போர் பதற்றம் தணியும் என எதிர்பார்ப்பு

மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழலில், உக்ரைன் எல்லையில் இருந்து சில படைப்பிரிவுகள் தங்கள் முகாமுக்கு திரும்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனால், போர் பதற்றம் தணியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய விரும்புகிறது. இதனால், தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்தது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டதால் போர் … Read more

'ஆக்கிரமிப்பு வேறு… சபா வேறு…' – திமுக கொள்கையை பரப்பிய 95 ஆண்டு கால தஞ்சை சுதர்சன சபா அகற்றத்தால் ஆதங்கம்

தஞ்சாவூர்: திமுகவின் கொள்கைகளை நாடகமாக பரப்பிய தஞ்சாவூரில் 95 ஆண்டு பழமையான சுதர்சன சபா இடித்து அகற்றப்பட்டுள்ளதற்கு ஆதங்கமும் பதிவாகி வருகிறது. திமுகவின் கொள்கைளை நாடகமாக பொதுமக்களிடையே பரப்பிய, தஞ்சாவூரில் 95 ஆண்டு பழமையான சுதர்சன சபா நாடக மன்றம் நேற்று இடித்து அகற்றப்பட்டது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே 40,793 சதுர அடி பரப்பளவில் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில், தஞ்சாவூர் மாநகராட்சி இடத்தினை, 1927-ம் ஆண்டு சுதர்சன சபா என்ற நாடக மன்றம் … Read more

குரு ரவிதாஸ் ஜெயந்தி: டெல்லி கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்; பக்தர்களுடன் கீர்த்தனையில் பங்கேற்பு

புதுடெல்லி: 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தி இலக்கிய கவிஞர் குரு ரவிதாஸின் பிறந்தநாளை ஒட்டி டெல்லி கரோல்பாகில் உள்ள ரவிதாஸ் கோயிலில் பிரதமர் நரேந்திர் மோடி தரிசனம் செய்தார். குரு ரவிதாஸ் திரு உருவச்சிலைக்கு அவர் தீப ஆராதனை காட்டி பூஜைகள் செய்தார். பின்னர் அங்கிருந்த பக்தர்களுடன் அமர்ந்து, அவர்கள் பாட்டுப்பாட அதற்கேற்ப இசைக்கருவி ஒன்றை இசைத்து கீர்த்தனையில் ஆர்வமுடன் பங்கேற்றார். பிரதமர் மோடி தனது தலையில் துணி ஒன்றையும் கட்டியிருந்தார். ரவிதாஸ் ஏற்படுத்திய ரவிதாஸியா … Read more

மேற்கத்திய நாடுகளின் மனநோய் தீர மருத்துவ நிபுணர்கள் உதவி தேவை: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கிண்டல்

மாஸ்கோ: அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாட்டவருக்கு தேவையற்ற பயம் ஏற்பட்டுள்ளது. அவர்களது சித்தப்பிரம்மை தெளிய நிபுணர்கள் தேவையென கிண்டல் செய்துள்ளது ரஷ்யா. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய விரும்புகிறது. இதனால், தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்தது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் அதிகரித்தது. உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவ திட்டமிட்டுள்ள தாகவும் இதற்காக தனது … Read more

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பிப்.22 முதல் 28 வரை அறிவியல் திருவிழா கொண்டாட்டம்: விக்யான் பிரச்சார் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் தகவல்

சென்னை: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வரும் 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தேசிய அறிவியல் திருவிழா கொண்டாடப்படும் என்று மத்திய அரசின் விக்யான் பிரச்சார் அமைப்பு அறிவித்துள்ளது. சர். சி.வி.ராமன் தனது புகழ்மிக்க ‘ராமன் விளைவு’ குறித்து 1928-ம் ஆண்டு பிப்.28-ம் தேதி உலகுக்கு அறிவித்தார். அவரது இந்த கண்டுபிடிப்புக்கு 1930-ம் ஆண்டில் நோபல்பரிசு வழங்கப்பட்டது. இதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் பிப்.28-ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய … Read more

மீண்டும் 30,000ஐ தொட்ட அன்றாட கரோனா பாதிப்பு: பரவல் விகிதம் 2.45% ஆக அதிகரிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று 27,409 என்றளவில் அன்றாட கரோனா தொற்று பதிவாகியிருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இது சற்றே அதிகரித்து மீண்டும் 30,000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,615 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று மீண்டும் தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்தது. நேற்று புதிதாக 756 பேருக்கு தொற்று உறுதியானது. * அன்றாட … Read more

எச்ஐவி தொற்றிலிருந்து மீண்ட நியூயார்க் பெண்: தொப்புள் கொடி ஸ்டெம் செல் சிகிச்சையில் இன்னொரு மைல்கல்!

நியூயார்க்: எச்ஐவி தொற்றிற்கு ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் நிரந்தர குணமளிக்க முடியும் என அண்மையில் விஞ்ஞானிகள் நிரூபித்தனர். ஏற்கெனவே இருவர் இந்த முறையில் குணமடைந்த நிலையில் மூன்றாவதாக அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் முழுமையாக குணமடைந்துள்ளார். உலகிலேயே எச்ஐவி பாதிப்பிலிருந்து குணமடைந்த முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெண்ணுக்கு தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. போன் மேரோ எனப்படும் எலும்பு மஞ்சை சிகிச்சை … Read more

ரேஷன் பொருட்கள் இருப்பு, விலை, புகார் எண்களை அட்டைதாரர்கள் அறியும் வகையில் வைக்க உத்தரவு: உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் நடவடிக்கை

சென்னை: ரேஷன் கடைகளில் வேலைநேரம், பொருட்கள் இருப்பு, அளவு, விலை,புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் ஆகிய வற்றை குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வகையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் வெ.ராஜாராமன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கை: பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் அட்டைதாரர்கள் கவனத்துக்கு, தகவல்கள் அடங்கிய தகவல் பலகைகள் பராமரித்து வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், … Read more

ம.பி.யில் விஎச்பி போராட்டத்தால் மாணவிகள் ஹிஜாப் அணிந்து அரசு கல்லூரிக்கு வர தடை

போபால்: ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் நுழைய மாணவிகளுக்கு தடைவிதிக்கப்பட்ட சம்பவம் மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே ம.பி.யில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரிக்கு கடந்த வாரம் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் … Read more

26/11, பதான்கோட், புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாக். தொடர்ந்து ஆதரவு: ஐ.நா. மாநாட்டில் இந்திய பிரதிநிதி குற்றச்சாட்டு

நியூயார்க்: மும்பை, பதான்கோட், புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பாகிஸ்தான் அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.நா. தீவிரவாத எதிர்ப்புக் கமிட்டி மாநாட்டில், ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரின் ஆலோசகர் ராஜேஷ் பரிஹர் பேசியதாவது: 2008 மும்பை தாக்குதல் (26/11), 2016 பதான்கோட் தாக்குதல், 2019புல்வாமா தாக்குதல் போன்ற கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்களை இந்த உலகம் கண்டது. இந்தத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் … Read more