கூகுள் தேடலில் தனிப்பட்ட வாட்ஸ் அப் குழுக்களின் லிங்க்: மீண்டும் எழும் வாட்ஸ் அப் பாதுகாப்பு அச்சம்!

வாட்ஸ் அப் தனிப்பட்ட குழுக்களின் இணைப்புகள் கூகுள் தேடியந்திரத்தில் தேடினால் கிடைத்திருப்பது மீண்டும் தெரியவந்துள்ளது. அதாவது, இவை ரகசியமான, தனிப்பட்ட வாட்ஸ் அப் உரையாடல் குழுக்களாக இருந்தாலும் அவற்றின் இணைப்பு (லிங்க்) இருந்தால் அதை கூகுளில் தேடியே எளிதில் அந்தக் குழுவில் இணைந்துவிடலாம். சுயாதீன இணையப் பாதுகாப்பு ஆய்வாளர் ராஜேஷகர் என்பவர் இது குறித்துப் பகிர்ந்துள்ளார். இதனால் வாட்ஸ் அப் தனிப்பட்ட குழுக்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வியெழுந்துள்ளது. அண்மையில், தனிப்பட்ட வாட்ஸ் அப் குழுக்களில் இணையக் … Read more

கொடநாடு விவகாரத்தில் உள்நோக்கமும் இல்லை; அரசியலும் இல்லை – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று மாலை காணொலி வாயிலாக சேலம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது இந்த ஆட்சியில் செய்யப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், “முன்பு முதலமைச்சராக இருந்தவர், இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். அவர் தனது சொந்த மாவட்டத்துக்கு என்ன செய்தார்? அதனை அவரால் பட்டியல் போட முடியுமா? நேற்றைய தினம் எடப்பாடி தொகுதியில் தேர்தல் … Read more

திருமண பாலியல் வல்லுறவை குற்றமாக்க தயக்கம் ஏன்? – ஒரு விரைவுப் பார்வை

“திருமண பாலியல் வல்லுறுவு (மேரிட்டல் ரேப்) பிரச்சினையில், மனைவியின் சம்மதம் என்பது இச்சமூகத்தில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட கருத்தாக உள்ளது. பெண்ணின் சம்மதத்திற்கு முக்கியத்துவம் அளித்து முன்னிலைப்படுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” – இது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கருத்து. இவர் மட்டுமல்ல பல்வேறு கட்சியினரும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் மத்திய அரசு, திருமண பாலியல் வல்லுறவை கிரிமினல் குற்றமாக்க வேண்டும் … Read more

வாட்ஸ் அப் கணக்கு நீக்கப்படாது: மே 15 வரை கால அவகாசம்

தங்களுடைய நிபந்தனைகளை ஏற்காத கணக்குகள் பிப்ரவரி 8-ம் தேதியன்று முடக்கப்படும் என்று தெரிவித்திருந்த வாட்ஸ் அப், தனது முடிவில் இருந்து தற்போது பின்வாங்கியுள்ளது. புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிந்துகொள்ள ஏதுவாக மே 15 வரை கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் விதிகள் மற்றும் நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டிருப்பது இணைய உலகில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்பின் மாற்றி அமைக்கப்பட்ட நிபந்தனைகளில், ஃபேஸ்புக்குடன் தரவுகள் பகிர்ந்து கொள்ளப்படுவது … Read more

விழுப்புரம்: பேருந்தில் தவறவிட்ட குழந்தை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைப்பு

விழுப்புரம்: சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று முன் தினம் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் ‌மணக்காணம் அருகே ‌பேருந்து சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 3 மாத குழந்தையை வைத்திருக்குமாறு கூறியுள்ளார். அப்பெண் குழந்தையை வாங்கிய சிறிது நேரத்தில் குழந்தையை கொடுத்த நபர் பேருந்திலிருந்து இறங்கி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இத்தகவல் அறிந்த கோட்டக்குப்பம் … Read more

தமிழகத்தில் 1967-க்கு பின் காங்கிரஸால் ஆட்சிக்கு வர முடியவில்லை – ராகுல் பேச்சுக்கு மக்களவையில் பிரதமர் மோடி பதிலடி

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி ‘1967-க்குப் பின் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லை’ என்று தெரிவித்ததுடன், காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். கடந்த மாதம் 31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாள் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையோடு அவை … Read more

100 கோடி பயனர்களைத் தாண்டிய ஐஃபோன்: வருவாயிலும் புதிய சாதனை

சர்வதேச அளவில் ஐஃபோன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடி என்கிற எண்ணிக்கையைத் தாண்டியதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசம்பார் காலாண்டு முடிவில் ஐஃபோன் மூலம் அந்நிறுவனம் 65.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாகப் பெற்று சாதனை படைத்தது. இது கடந்த வருடத்தை விட 17 சதவீதம் அதிகமாகும். தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஐஃபோன்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாக ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் கூறியுள்ளார். “டிசம்பர் காலாண்டில் விற்பனையில் 165 கோடி … Read more

தமிழகத்தில் இன்று 5,104 பேருக்குக் கரோனா தொற்று உறுதி: சென்னையில் 839 பேருக்கு பாதிப்பு; 21,027 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 5,104 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,15,986. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,43,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32,72,322 Source link

மேற்கு உ.பி.யில் பாஜகவுக்கு தலைவலியாகும் ஜாட் அரசியல்: அமித் ஷா முயற்சி வெல்லுமா?

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு முதல் 2 கட்டத் தேர்தல் நடைபெறும் மேற்கு மாவட்டங்களில் கணிசமாக வசிக்கும் ஜாட் சமூகத்தினர் இந்த முறை பாஜக மீது அதிருப்தியில் உள்ள நிலையில், அவர்களை ஈர்க்க கட்சித் தலைமை பகீரத பிரயத்தனம் செய்கிறது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை தேர்தல் நடைபெறுகிறது. கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 10-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் உத்தரப் … Read more

வாட்ஸ் அப் கணக்கை கணிணியில் இணைக்க கூடுதல் பாதுகாப்பு அம்சம் அறிமுகம்

வாட்ஸ் அப் கணக்குகளை கணிணி மூலம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கணிணியோடு தங்கள் வாட்ஸ் அப் கணக்கை இணைக்கும் பயனர்களுக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இனி வாட்ஸ் அப் வெப் அல்லது டெஸ்க்டாப்பில் உங்களது கணக்கை இணைக்க, க்யூ ஆர் கோட் (QR code) ஸ்கேன் செய்வதற்கு முன்னர், முகத்தையோ, விரல் ரேகையையோ அடையாளமாக வைத்து மொபைலை அன்லாக் செய்ய வேண்டும். இப்படி இணைக்கப்பட்ட பிறகு யார் கணிணியில் அந்தக் கணக்கை … Read more