ஆசியாவின் மிகப்பெரிய அனிமேஷன் சிறப்பு மையம் பெங்களூருவில் திறப்பு

பெங்களூரு: ஆசியாவின் மிகப்பெரிய அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றுக்கான சிறப்பு மையம் பெங்களூருவில் திறக்கப்பட்டது. கர்நாடக அரசு சார்பில் பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றுக்கான மிகப்பெரிய சிறப்பு மையத்தை நேற்று முன்தினம் தகவல் தொழில்நுட்ப, உயிரி தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் அஸ்வத் நாராயணா பேசும்போது, ” அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) … Read more

மே 15-ம் தேதிக்குள் வாட்ஸ் அப்பின் புதிய கொள்கை மாற்றங்களை ஏற்கவில்லை என்றால் என்னவாகும்?

வாட்ஸ் அப் செயலியில் புதிதாகத் தனியுரிமைக் கொள்கைகள் (new privacy policy) மாற்றப்பட்டுள்ளன. அதை ஏற்காத பயனர்களால் செய்திகளைப் படிக்கவோ, அனுப்பவோ முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அழைப்புகளைப் பெற முடியும் என்று தெரிகிறது. ‘மே 15 முதல் வாட்ஸ் அப் முழுமையாகச் செயல்பட, புதிய விதிகளை ஏற்க வேண்டும் என்று பயனர்களிடம் மெதுவாகக் கேட்க ஆரம்பிப்போம்’ என்று தங்களது கூட்டு நிறுவனங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மின்னஞ்சலை டெக்க்ரன்ச் என்கிற … Read more

`மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தால் தமிழகத்தில் இதுவரை 48.50 லட்சம் பேர் பயன்

சென்னை: தமிழக சுகாதாரத் துறை சார்பில் `மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று,மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்ள தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை உள்ளிட்ட சேவைகள் இதில்வழங்கப்படுகின்றன. முதல்கட்டமாக 50 வட்டாரங்களில் உள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்பசுகாதார நிலையங்கள், 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், … Read more

வரும் ஏப்ரல் முதல் அனைத்து பிஎஃப் கணக்குகளும் 2 பாகங்களாக பிரிப்பு

புதுடெல்லி: வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனைத்து வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்குகளும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட உள்ளன. பிஎஃப் திட்டத்தை பயன்படுத்தி, அதிக அளவில் வருமானம் ஈட்டுபவர்கள் அதிக தொகையை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கி அதன் மூலம் அதிக லாபம் அடைந்துவந்தனர்.இந்தப் போக்கை தடுக்க மத்திய அரசு, ஊழியர் தரப்பிலிருந்து கட்டப்படும் பிஎஃப் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்தைத் தாண்டினால், அதன் மூலமான வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு பிப்ரவரி … Read more

விளம்பர உள்ளடக்கங்களை சமூக ஊடக ஆளுமைகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்: விளம்பரக் கட்டுப்பாட்டு ஆணையம்

சமூக ஊடகங்களில் தாக்கம் ஏற்படுத்தும் ஆளுமைகள், தாங்கள் விளம்பரப்படுத்தும் உள்ளடக்கங்கள் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய விளம்பத் தர நிர்ணய கவுன்சில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய விளம்பத் தர நிர்ணய கவுன்சிலின் (ASCI) புதிய வரைவறிக்கையில், டிஜிட்டல் ஊடகங்களில் தாக்கம் ஏற்படுத்தும் ஆளுமைகள், யூடியூப் பதிவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களுக்குப் பிடித்தமான பிராண்டட் பொருட்கள் என்று கூறிப் பதிவிடும்போது, அது விளம்பரப்படுத்தப்பட்ட உள்ளடக்கமாக இருந்தால் அதைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்களைத் தயார் செய்யும் பணிகள் தீவிரம்

திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்களைத் தயார் செய்யும் பணிகள் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில், திருச்சி மாநகராட்சியில் 65 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு பிப்.19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக திருச்சி மாநகரில் 238 இடங்களில் 859 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜன.28-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, பிப்.4-ம் தேதி நிறைவடைந்தது. தொடர்ந்து, பிப்.5-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. … Read more

5 கோடி கோர்ப்வேக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஆர்டர்: வரிவிதிப்புக்கு முந்தைய விலை ரூ.145 ஆக இருக்கும்

ஹைதராபாதைச் சேர்ந்த பயலாஜிகல் இ நிறுவனத்தின் கோர்ப்வேக்ஸ் என்ற கரோனா தடுப்பூசியை வாங்க மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது. ஒரு டோஸ் ரூ.145 விலையில் (வரியின்றி) 5 கோடி டோஸ் வாங்கப்படும் எனத் தெரிகிறது. ஆனால் இந்த தடுப்பூசியை எந்த வயது பிரிவினருக்கு அனுமதிக்கலாம் என்பது குறித்து மத்திய அரசு இன்னமும் முடிவு செய்யவில்லை எனத் தெரிகிறது. இருப்பினும் இது தொடர்பான ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் தடுப்பூசி தொடர் பான தொழில்நுட்பக் குழு ஈடுபட்டு வருகிறது. இப்போது … Read more

5ஜி சேவை: குவால்காம் நிறுவனத்துடன் கைகோத்த ஏர்டெல்

இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை அளிப்பது தொடர்பாக பார்தி ஏர்டெல், பிரபல அமெரிக்க சிப் நிறுவனமான குவால்காம் உடன் கைகோத்துள்ளது. இந்தியாவில் இதுவரை 5ஜி அலைக்கற்றை தொடர்பான ஏலம் விடப்படவில்லை. இந்நிலையில், 5ஜி அலைக்கற்றையை வழங்க தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இதற்கிடையே நாட்டின் 2-வது பெரிய டெலிகாம் சேவையாளரான பார்தி ஏர்டெல், குவால்காம் உடன் இணைந்து 5ஜி அலைக்கற்றையை வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கிடையே ஏர்டெல் நிறுவனத்தின் பிரதான போட்டியாளரான ஜியோ, … Read more

நீட் தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் ஆண்டுக்கு 400 மாணவர்கள் பயனடைகின்றனர்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அதிமுக அரசு வழங்கியதன் காரணமாக, ஆண்டிற்கு கிட்டத்தட்ட 400 ஏழை, எளிய மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: “நீட் தேர்வு குறித்து அனைத்திந்திய அதிமுக மீதும், என் மீதும் குற்றம்சாட்டி நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்தால் “எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத்திரும்ப சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் … Read more

இந்தியாவில் கரோனா பாசிடிவிட்டி விகிதம் 7.4% ஆக சரிவு; புதிதாக 1,07,474 பேருக்கு தொற்று: அறிக 10 தகவல்கள்

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா பாசிடிவிட்டி விகிதம் (அதாவது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உள்ளது என்ற விகிதம்) 7.4% ஆக சரிந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 474 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைவிட 16% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 1. கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கடந்த … Read more