இந்திய தூதரக உதவி கிடைக்காமல் தவித்து வருகிறோம்: உக்ரைனில் இருந்து அந்தியூர் மாணவி பகிர்ந்த தகவல்கள்

ஈரோடு: இந்திய தூதரகத்தின் உதவி கிடைக்காத நிலையில், சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறோம் என உக்ரைனில் மருத்துவம் படிக்கும் அந்தியூர் மாணவி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த நாகராஜ் – குணவதி தம்பதியினரின் மகள் மவுனிசுகிதா (20). உக்ரைனில் உள்ள லையு நேசனல் மெடிகல் யுனிவர்சிடியில், மூன்றாமண்டு மருத்துவம் படித்து வருகிறார். ரஷ்யா – உக்ரைன் இடையே போர் மூண்டுள்ள நிலையில், தங்களை மீட்க இந்திய அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் … Read more

ஹிஜாப் வழக்கின் நீதிபதியை விமர்சித்த கன்னட நடிகர் கைது: சமூக ஆர்வலர்கள் கண்டனம்

பெங்களூரு: கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு கன்னட நடிகரும் சமூக ஆர்வலருமான சேத்தன் குமார் அஹிம்சா எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இவ்வழக்கை விசாரிக்கும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா தீக் ஷித், ஜே.எம்.காஷி ஆகியோர் அடங்கிய அமர்வின் விசாரணை முறையையும் அவர் விமர்சித்தார். இந்நிலையில், பெங்களூருவில் உள்ள சேஷாத்ரிபுரம் போலீஸார் தாமாக முன்வந்து சேத்தன் மீது இந்திய தண்டனை சட்டம் 505 (2) … Read more

அமெரிக்க எச்சரிக்கை முதல் புதினின் போர் அறிவிப்பு வரை – உக்ரைன் நெருக்கடியின் சமீபத்திய டைம்லைன்

மாஸ்கோ: கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கிவிட்டது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் அவசர ஆலோசனை நடத்தத் தொடங்கிய நிலையில் ரஷ்ய அதிபரின் உத்தரவும் வெளியானது. உக்ரைன் தலைநகர் கீவ் மீது குண்டு மழை பொழியத் தொடங்கியுள்ளது. உக்ரைனில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 18 முதல் 60 வயதுடைய அனைவரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. போர் தொடங்கியுள்ள நிலையில் இது மிகப் பெரிய மனித உயிர்கள் இழப்புக்கு வித்திடும் இதற்கு ரஷ்யாவை பொறுப்பேற்க … Read more

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள், புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினருக்காக ஹெல்ப்லைன்களை அறிவித்தது தமிழக அரசு

சென்னை: உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரஷ்ய ராணுவம் இன்று (24.2.2022) அதிகாலை உக்ரைன் நாட்டுக்குள் ராணுவ நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளதாக ஊடகச் செய்திகளின் வாயிலாக அறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 மாணவர்கள், பெரும்பாலும் தொழில்முறை கல்வி படிப்போர் மற்றும் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கித் … Read more

தமிழகத்தை ஆளமுடியாதா? – ராகுல் காந்திக்கு பாஜக பதில்

புதுடெல்லி: தமிழகத்தை பாஜக ஆளமுடியாது என்று ராகுல்காந்தி கூறியது தவறு என்று பாஜக கூறியுள்ளது. தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது. திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிகமான வார்டுகளை பாஜக வென்றுள்ளது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘தமி ழகத்தை பாஜக ஒரு காலத்திலும் ஆள முடியாது’ என்று குறிப் பிட்டிருந்தார். ஆனால், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ள நிலையில், … Read more

பேரிழப்பு ஏற்படும்; அதற்கு ரஷ்யாவே பொறுப்பாகும்: புதினுக்கு அமெரிக்கா கண்டனம்

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் இதனால் பெரியளவில் மனித உயிர்கள் இழப்பைச் சந்திக்கும் இதற்கு ரஷ்யாவை பொறுப்பாகும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று காலை, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்யா உக்ரைன் இடையே போர் மூண்டுவிடக் கூடாது என உலக நாடுகள் பலவும் சமரசம் பேசி வந்தநிலையில், ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ், உக்ரைன் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கட்சி வாரியாக வாக்கு சதவீதம் – முழு விவரம்

தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியதுடன் பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் பிடித்தது. இந்தத் தேர்தலில் வாக்கு சதவீதத்திலும் திமுக மிகப் பெரிய அளவில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக இரண்டாவது இடத்தில் உள்ளது. பாஜக கவனிக்கத்தக்க வாக்கு சதவீதம் பெற்றுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,607 வார்டுகளுக்கு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ், சிபிஐ, … Read more

திருப்பதியில் இலவச டிக்கெட் கிடைத்தும் சுவாமியை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் தவிப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் சர்வ தரிசன டிக்கெட்டுகளை வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து வாங்கி விடுகின்றனர். ஆனால், அவர்கள் தரிசனம் செய்ய 3 அல்லது 4 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. திருப்பதியில் 3 அல்லது 4 நாட்கள் வரை தங்குவதற்கும், ஓட்டல்களில் உணவு உண்ப தற்குமே கொண்டு வந்த பணம் கரைந்து விடுகிறது. இதனால், பலர் அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், அல்லது நிவாசம், கோவிந்தராஜர் சத்திரம் ஆகிய … Read more

கிழக்கு உக்ரைனில் தீவிரத் தாக்குதலைத் தொடங்கியது ரஷ்யா: பிரத்யேக ஆயுதங்கள் மூலம் ராணுவ கட்டமைப்புகளைக் குறிவைத்து குண்டு மழை 

மாஸ்கோ: உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு சில மணி நேரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அங்கு தலைநகர் கீவின் முதன்மை விமான நிலையம் அருகே குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. வரலாறு காணாத விளைவு ஏற்படும்: முன்னதாக உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை அறிவித்துப் பேசிய ரஷ்ய அதிபர் புதின், “உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிடுகிறேன். இதன் நோக்கம், கடந்த 8 ஆண்டுகளாக உக்ரைன் ஆட்சியாளர்களால் சில … Read more

ஜெயக்குமார் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்து பிப்.28-ல் தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: ”முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுக சார்பில் வருகின்ற திங்கட்கிழமை (பிப்.28) காலை 10.30 மணியளவில், தமிழகம் முழுவதும் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: “ஆளும் திமுகவின் கையாளாகாத் தனத்தையும், ஆளும் திமுக அமைச்சர்களின் அராஜகத்தையும், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகளையும், நாளொரு … Read more