உண்டியலில் சேர்த்த சில்லறைகளை கொடுத்து ஸ்கூட்டர் வாங்கிய அசாம் காய்கறி வியாபாரி

பார்பேட்டா: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹபிஸூர் அக்ஹாந். காய்கறி வியாபாரம் செய்து வரும் அவருக்கு சொந்தமாக ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. கடந்த ஒராண்டாக அதற்காகபணம் சேகரிக்க ஆரம்பித்தார். அன்றாடம் வரும் வருவாயில் கொஞ்சம் சில்லறைகளை உண்டியலில் போட்டு சேகரித்து வந்தார். ‘சுசூகி ஆக்சஸ் 125’ ஸ்கூட்டரை வாங்க விரும்பிய அக்ஹாந், சுசூகிநிறுவனம் நடத்திய வாகன விற்பனை முகாமுக்குச் சென்று, தனது விருப்பத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து, அவரது உண்டியல் சேமிப்பு பணம் ஒரு … Read more

ஆயுதம் ஏந்த தயாராக உள்ள எவரும் படையில் இணையலாம்: குடிமக்களுக்கு உக்ரைன் அரசு அழைப்பு

‘ஆயுதம் ஏந்துவதற்குத் தயாராக இருக்கும் எவரும் நாட்டின் பாதுகாப்புப் படையில் சேரலாம்’ என்று தனது குடிமக்களை உக்ரைன் அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் விடுத்த அறிவிப்பில், “ஆயுதம் ஏந்துவதற்குத் தயாராக இருக்கும் எவரும் நாட்டின் பாதுகாப்புப் படையில் சேரலாம்” என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே, ரஷ்யாவின் தாக்குதலில் ஏறத்தாழ 100 உக்ரைன் பாதுகாப்பு படையினர் பலியானதாகவும், உக்ரைன் அரசின் 8 இணையப் பக்கங்கள் … Read more

'சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல': திக பொதுச்செயலாளர் துரைசந்திரசேகர்

கடலூர்: மன்னர்கள் கட்டிய சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல என பெண் பக்தரை தாக்கிய தீட்சிதர்களை கைது செய்யக் கோரி சிதம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் துரைசந்திரசேகர் தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில்(கனகசபை) ஏற சென்ற பெண் பக்தர் ஜெயஷீலா என்பவரை தீட்சிதர்கள் தாக்கி சாதிப் பெயரைச் கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு … Read more

வீட்டுப் பணியாளர், உதவியாளர், டிரைவருக்கு ரூ.3.95 கோடி ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி பங்குகள் பரிசு: நிர்வாக இயக்குநர், சிஇஓ வைத்யநாதன் தகவல்

புதுடெல்லி: தனது கார் டிரைவர், வீட்டுப் பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு 9 லட்சம் பங்குகளை பரிசாக அளிப்பதாக ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வி. வைத்யநாதன் தெரிவித்துள்ளார். தனது பயிற்சியாளருக்கு 3 லட்சம் பங்குகளும், வீட்டுப் பணியாளர் மற்றும் டிரைவருக்கு தலா 2 லட்சம் பங்குகளும், அலுவலக உதவியாளர் மற்றும் வீட்டு உதவியாளருக்கு தலா ஒரு லட்சம் பங்குகளும் பரிசாக அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மொத்தம் 9 லட்சம் … Read more

Russia-Ukraine crisis | 'ரத்தம் சிந்தும் அழிவுப் பாதை' – உலக நாடுகளின் எதிர்வினை என்ன?

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும், சர்வதேச அமைப்புகளும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே பெரும்பாலான நாடுகளும் கொண்டுள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரஷ்ய படைகள், உக்ரைனை தீவிரமாக தாக்கத் தொடங்கியுள்ளன. உக்ரைன் ராணுவ வீரர்கள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ரஷ்ய அதிபர் புதின் … Read more

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

சென்னை: “மத்திய அரசின் மூலம் தனி விமானம் ஏற்பாடு செய்து உக்ரைனில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய அழுத்தங்களை தமிழக அரசு தர வேண்டும்” என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை அறிவித்து குண்டுகளை வீசி வரும் நிலையில், அந்த நாட்டிற்கு கல்விக்காகவும், வேலைக்காகவும் சென்றுள்ள தமிழர்களை பத்திரமாக மீட்டு தமிழகம் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க … Read more

ரஷ்யா – உக்ரைன் போர் | மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம்: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா அச்சம்

ஜெனீவா: “ரஷ்யா – உக்ரைன் மோதல், மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம்“ என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா நிலவரம் குறித்து ஆலோசிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் இன்று கூடியது. ஒரே வாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இரண்டாவது முறையாக கூடியது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தை தணிக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டபோதே … Read more

உக்ரைனின் 100+ ராணுவ வீரர்கள் பலி | ’விமானப்படை தளங்களை அழித்துவிட்டோம்’ – ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம்

மாஸ்கோ: கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், உக்ரைனின் விமானப்படை தளங்களை அழித்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அண்மைத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யாவுக்கு உலக நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துவரும் சூழலில், ”உக்ரைனின் ராணுவ கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்து பிரத்யேக ஆயுதங்கள் மூலம் திட்டமிட்டு தாக்குதல் நடத்துகிறோம். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்கவில்லை” என்று ரஷ்யா தெரிவித்தது. இந்நிலையில், கடைசியாக ரஷ்ய … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சிகள் வென்ற வார்டுகள் – ஓர் அட்டவணை

தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியதுடன் பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் பிடித்துள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,607 வார்டுகளுக்கு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் திமுக களம் கண்டது. பாஜக கழண்டுகொண்ட நிலையில், இதரக் கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக இந்தத் தேர்தல் களத்தைச் … Read more

‘விண்ணைத் தொடும்’ கச்சா எண்ணெய் விலை: 2014-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக உயர்வு: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

நியூயார்க்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை இன்று முதன்முறையாக 2014-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு பீப்பாய் 100 டாலர் என்ற அதிகபட்ச விலையை தொட்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாகவும் ரஷ்யா … Read more