திமுகவின் பரிசீலனை பட்டியலில் 3 பேர் – சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யார்?

சென்னை: சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயரை தேர்வு செய்யும் பணியில் திமுக தலைமை ஈடுபட்டுள்ளது. அதில் 3 பேரின் பெயர்களை பரிசீலித்து வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே பழமையானது சென்னை மாநகராட்சி. இது 334 ஆண்டுகள் பாரம்பரியம்மிக்கது. தமிழகத்திலேயே பொது சுகாதாரத்துக்கு வழிகாட்டியாக சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை விளங்கி வந்தது. சென்னை மாநகராட்சியில் இதுவரை பெண்கள் யாரும் மேயராக இருந்ததில்லை. முதல் முறையாக பெண் ஒருவர் வரும் … Read more

ராமர் பாலம் தொடர்பான சுப்பிரமணியன் சுவாமி மனு மீது மார்ச் 9-ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி கடந்த 2020-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதை 3 மாதங்களுக்குப் பின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், “பல மாதங் களாக தனது மனு விசாரணைக்கு வரவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி நினை வூட்டினேன். ஆனாலும் பலன் இல்லை. முக்கியமான … Read more

கோவை மாநகராட்சியில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்த மக்கள் நீதி மய்யம்

கோவை: கோவை மாநகராட்சி தேர்தலில் எந்த வார்டிலும் 1,000 வாக்குகளை தாண்டாத மக்கள் நீதி மய்யம் கட்சி, போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் திமுகவின் தோல்விக்கு மக்கள் நீதி மய்யம் பிரித்த வாக்குகள் காரணம் என்று கூறும் அளவுக்கு மாநகராட்சி, அதனை ஒட்டிய பகுதிகளில் அக்கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றது. திமுகவுக்கு கிடைக்க வேண்டிய கட்சி சாராத பொதுவான வாக்குகள் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு … Read more

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பான மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் வரும் 25-ல் விசாரணை

புதுடெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுக்கள் (பிஐஎல்)மீது பிப்.25-ல் விசாரணை நடத்தஉச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண் டுள்ளது. பெகாசஸ் ஒட்டுகேட்பு விவ காரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியை கொண்டு சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரி வக்கீல் எம்.எல்.சர்மா, மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார், பரன்ஜோய் குஹா தாகூர்தா, எஸ்.என்.எம்.அபிதி, பிரேம் சங்கர் ஜா, ரூபேஷ் குமார் சிங், இப்ஸா சதாஷி உள்ளிட்டோர் சார்பில் ரிட் மனுக்கள் தாக்கல் … Read more

பிப்ரவரி 23: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,47,006 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் … Read more

2020-ல் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டோரில் 68% பலாத்கார குற்றவாளிகள்

புதுடெல்லி: கடந்த 2020-ல் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களில் 68% பேர் பலாத்கார குற்றவாளிகள் ஆவர். கடந்த 2020-ம் ஆண்டில் கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் சுமார் 90 ஆயிரம் பேர் தண்டனை பெற்று சிறையில் உள்ளதாக சிறைத் துறை புள்ளி விவர அறிக்கை கூறுகிறது. இதில் 14.2 சதவீதம் பேர் பலாத்கார குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக தண்டனை பெற்ற18,615 பேரில் 67.9% பேர் (12,631) பலாத்கார குற்றவாளிகள் … Read more

பிப்ரவரி 23: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,47,006 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 … Read more

இருளில் மூழ்கிய சண்டிகர்: 36 மணி நேரமாக மின்சாரம் இல்லை; அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்

சண்டிகர்: மின் வாரியத்தைத் தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சண்டிகர் மின்வாரிய் ஊழியர்கள் மேற்கொண்டுள்ள 3 நாள் போராட்டம் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமையன்று தொடங்கிய போராட்டம் நீடிப்பதால் 36 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் தவிக்குள்ளாகியுள்ளது சண்டிகர் யூனியன் பிரதேசம். பல வீடுகளில் தண்ணீர் இல்லாமல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மின் விளக்கு இல்லாமல் போக்குவரத்து ஆபத்தானதாக மாறியுள்ளது. அரசு மருத்துவமனைகள் பலவும் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த அறுவை சிகிச்சைகளை மின்சாரம் இல்லாததால் … Read more

தமிழகத்தில் இன்று 618 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 156 பேருக்கு பாதிப்பு- 2,153 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 618 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,47,006. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,49,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,98,231. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 82,97,357 பேர் வந்துள்ளனர். சென்னையில் 156 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட … Read more

உ.பி. தேர்தல் களம்: ’அவத்’ பிரதேச தொகுதிகள் அதிமுக்கியத்துவம் பெறுவதன் பின்புலம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அவத் பிரதேசத்தில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள தலைநகர் லக்னோவின் தொகுதிகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. உத்தரப் பிரதேசத்தின் 59 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று (பிப்.23) நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முகலாயர்கள் உள்ளிட்ட மன்னர்களின் ஆட்சியில் இந்த அவத் பிரதேசம் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. அதேபோல், இந்த காலத்திலும் அவத் பகுதியின் தொகுதிகளில் இருந்து தான் நாட்டின் அதிகமான பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜவஹர்லால் நேரு, … Read more