நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழக பாஜகவின் கணக்கு 300+

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழக பாஜக மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 22 வார்டுகளிலும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 56 வார்டுகளிலும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 230 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆக, 308 வார்டு உறுப்பினர்களை இந்தத் தேர்தலில் தமிழக பாஜக பெற்றுள்ளது. மாநகராட்சிகளை எடுத்துக்கொண்டால் கன்னியாகுமரியில் 11 வார்டுகளிலும், திருப்பூரில் 2 வார்டுகளிலும், கடலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் வேலூரில் … Read more

ஆசிஷ் மிஸ்ரா ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு

உ.பி. மாநிலம் லக்கிம்பூர்கேரி யில் கடந்த அக்டோபர் 3-ம் தேதிபோராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதியதிலும் தொடர்ந்து நடந்த வன்முறையிலும் 8 பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் மீது காரை மோதியதாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். அவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி யதைத் தொடர்ந்து கடந்த வாரம் ஆசிஷ் மிஸ்ரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து லக்கிம்பூர்கேரியில் … Read more

திமுக ஆதிக்கம்: மாநகராட்சிகளில் கட்சி வாரியாக வெற்றி சதவீதம் – ஒரு விரைவுப் பார்வை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் வசப்படுத்தியுள்ள திமுக, அனைத்து மாநகராட்சியிலுமே அசைக்க முடியாத அளவுக்கு இருப்பது, அக்கட்சியின் வெற்றி சதவீதமே வெளிப்படுத்துகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 4 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். ஒரு இடத்தில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய இடங்களில், இரவு 9.30 மணி வரை 1370 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 949 திமுக வேட்பாளர்களும், 164 அதிமுக வேட்பாளர்களும் வெற்றி … Read more

'பள்ளி வளாகத்தில் ஹிஜாப் அணிய தடை இல்லை. ஆனால்…' – உயர் நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தகவல்

பெங்களூரு: “ஹிஜாப்புக்கு விதித்த தடை என்பது வகுப்பறையிலும் வகுப்பு நேரங்களிலும் மட்டுமே” என்று கர்நாடக அரசு வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஹிஜாப் அணிவது தொடர்பாக மாணவர்கள் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் ஜேஎம் காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கர்நாடக அரசு சார்பில் இன்று அட்வகேட் ஜெனரல் (ஏஜி) பிரபுலிங் நவத்கி தனது … Read more

தமிழகத்தில் இன்று 671 பேருக்குக் கரோனா தொற்று; உயிரிழப்பு 8: சென்னையில் 169 பேருக்கு பாதிப்பு- 2,375 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,46,388. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,49,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,96,078. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 82,59,871 பேர் வந்துள்ளனர். சென்னையில் 169 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

விலைவாசி உயர்வு விண்ணை தொடுகிறது: சோனியா காந்தி குற்றச்சாட்டு

உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி எம்.பி.சோனியா காந்தி நேற்று தனது தொகுதி மக்களிடம் காணொலி வாயிலாக பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது: கரோனா ஊரடங்கின் போது தொழில்கள் முடங்கின. புலம்பெயர் தொழிலாளர்கள் பல மைல் தொலைவு நடந்தே வீடு திரும்பினர். அப்போது மத்தியில் ஆளும் மோடி அரசும், உ.பி.யில் ஆளும் ஆதித்யநாத் அரசும் மக்களின் வலியை புரிந்து கொள்ளவில்லை. மக் களுக்கு நிவாரணமும் வழங்கவில்லை. பெட்ரோல், டீசல், சமையல் காஸ், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை … Read more

பிரதமர் மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம்: இம்ரான் கானின் விருப்பம்

மாஸ்கோ: “இரு நாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளைக் களைவதற்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் செய்ய விரும்புகிறேன்” என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு விருந்தினராக பயணம் மேற்கொண்டுள்ளார். மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க இருக்கும் அவர், அதற்கு முன்னதாக, ரஷ்ய டுடேவுக்கு அளித்த பேட்டியில்தான் இந்திய பிரதமருடன் விவாதம் நடத்த விரும்புவதாக சொல்லியுள்ளார். அதில், “இந்தியா ஒரு எதிரி நாடாக மாறியதால் அவர்களுடனான … Read more

கொங்கு மண்டலத்தில் வெற்றி… திராவிட மாடல் ஆட்சிக்கு மக்களின் அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: “அதிமுகவின் கோட்டை என்று சொன்ன கொங்கு மண்டலத்தில் பெரும் வெற்றியை பெற்றுள்ளோம்” என்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றிய நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றி குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின், “கடந்த 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றிதழ் இந்த வெற்றி. திராவிட மாடல் ஆட்சிக்கு … Read more

கன்னட திரைப்படத்தில் நடிக்கும் எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான‌ எடியூரப்பா (77) ‘தனுஜா’ என்ற கன்னட திரைப்படத்தில் முதல்வர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து திரைப்படத்தின் இயக்குநர் ஹரீஷ் ஹள்ளி கூறியதாவது: எடியூரப்பா முதல்வராக இருந்த போது நீட் தேர்வை எழுத முடியாமல் கஷ்டப்பட்ட மாணவிக்கு உதவினார். அதன் மூலம் 350 கி.மீ. தொலைவில் இருந்தபடியே அந்த‌ மாணவி தேர்வெழுதி வெற்றி பெற்றார். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘தனுஜா’ படத்தை இயக்கி வருகிறேன். கதை பிடித்து … Read more

திருப்பத்தூர்: 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகளில் திமுக அமோக வெற்றி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் என 4 நகராட்சிகள், ஆலங்காயம், உதயேந்திரம், நாட்றாம்பள்ளி என 3 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. 171 வார்டுகளுக்கு 798 பேர் போட்டியிட்டனர். 3 லட்சத்து 15 ஆயிரத்து 201 வாக்காளர்களில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 156 பேர் வாக்களித்தனர். இதில், திருப்பத்தூர் நகராட்சியில் 72 … Read more