சட்டப்பேரவைத் தேர்தலில் 2-ம் இடம் பிடிக்க எதிர்க்கட்சிகள் இடையே கடும் போட்டி: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சனம்

உ.பி. சட்டப் பேரவைத் தேர்தலில் 2-ம் இடத்தைப் பிடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் போராடுகின்றன என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். உத்தர பிரதேச மாநில சட்டப் பேரவைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 3-ம் கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் நேற்று செய்தி நிறுவனத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. எனவே தேர்தலில் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தத்தேர்தலில் … Read more

வாக்கு எண்ணிக்கைக்கு தயார் நிலையில் தமிழகம்: புகைப்படத் தொகுப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தமிழகம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்துப் பகுதிகளும் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கோவை ஜிசிடி தொழில்நுட்பக் கல்லூரி முன்பு … Read more

மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு முந்தைய காலத்தைவிட அதிக நிதியை செலவிட்ட 5 மாநிலங்கள்

மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு முந்தைய காலத்தைவிட அதிக நிதியை தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்கள் செலவிட்டுள்ளன. மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த கரோனா பாதிப்புக்கு முந்தைய 2019-20 நிதியாண்டில் பிஹார் மாநிலம் 3,371 கோடி செலவிட்டது. ஆனால் கரோனா பாதிப்புக்கு பிறகு நடப்பு நிதியாண்டில் ரூ.5,771 கோடியாக அதிகரித்தது. … Read more

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரள கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 22-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 23-ம் … Read more

கர்நாடகாவின் நந்தி மலையில் இருந்து 300 அடி பள்ளத்தில் தவறி கீழே விழுந்த இளைஞரை பத்திரமாக மீட்டது விமானப் படை

கர்நாடகாவின் நந்தி மலையில் ஏறும்போது 300 அடி கீழே விழுந்து பாறைத்திட்டில் சிக்கிக் கொண்ட 19 வயது இளைஞரை விமானப் படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் புகழ்பெற்றசுற்றுலா மையமாக விளங்கும் நந்தி மலை உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் படிக்கும் டெல்லியை சேர்ந்த நிஷாங்க் என்ற 19 வயது மாணவர் நேற்று முன்தினம் இங்கு மலையேற்றம் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பலநூறு அடி ஆழமுள்ள பள்ளத்தில் அவர் தவறி விழந்தார். இதுகுறித்து தகவல் … Read more

உக்ரைன் குண்டுவீச்சில் எல்லை கட்டமைப்புகள் சேதம்: ரஷ்ய பாதுகாப்புத் துறை குற்றச்சாட்டு

உக்ரைன் பகுதியில் இருந்து நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்கு தலில் தங்களது எல்லைப் பகுதிகட்டமைப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் சேர உக்ரைன் ஆர்வம்காட்டுகிறது. இதனால், தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷ்யா எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேலும், உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வருகிறது. உக்ரைன் தரப்பிலும் படைகள் குவிக்கப்படுகின்றன. இதனால், ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், … Read more

பிப்ரவரி 21: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,45,717 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 … Read more

ஆந்திர ஐடி அமைச்சர் கவுதம் ரெட்டி மாரடைப்பால் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

ஹைதராபாத்: ஆந்திர மாநில ஐடி துறை அமைச்சர் கவுதம் ரெட்டி இன்று காலை மாரட்டைப்பால் காலமானார். அவருக்கு வயது 50. முன்னதாக, ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு காலை 7.45 மணியளவில் மயங்கிய நிலையில் கவுதம் ரெட்டி கொண்டு வரப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த அப்பல்லோ மருத்துவர்கள், அவர் அழைத்து வரப்பட்டபோதே பேச்சு, மூச்சற்ற நிலையில் கொண்டுவரப்பட்டதாகவும் அவருக்கு வீட்டிலேயே பலத்த மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிபிஆர் … Read more

வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலவரத்தை தூண்டிவிட அதிமுக திட்டம் – செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

கோவை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலவரத்தை தூண்டிவிட, அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர் எனஅமைச்சர் வி.செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக மின்சார, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சரும், கோவை மாவட்டப் பொறுப்பாளருமான அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், “கோவையில் எதிர்கட்சியான அதிமுகவினர், வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க சில முயற்சிகளை செய்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் வன்முறை, கலவரத்தை தூண்டிவிட அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர் என எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக, கோவையில் … Read more

காங்கிரஸ் அல்லாத பாஜக எதிர்ப்பு அணி அமையாது: சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத்

மும்பை: காங்கிரஸ் அல்லாத பாஜக எதிர்ப்பு அணி அமையாது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை), தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்தார். இந்தச் சந்திப்பு 2024 பொதுத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் அல்லாத முன்னணியை உருவாக்கும் முயற்சி என்று கூறப்பட்டது. இதில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வும் கவனமாகக் காய் நகர்த்துவதாக விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில், … Read more