50,000 இடங்களில் 23-வது மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: பிப் 26ம் தேதி சனிக்கிழமையன்று, 23வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் நடைபெறவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (21-02-2022) சென்னை அரும்பாக்கத்தில் திருநங்கைகளே நடத்தும் நம்ம கபே சிற்றுண்டி உணவகத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: “மறைந்த முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் எப்படி மாற்றுத்திறனாளிகள் எனப் பெயர் சூட்டி … Read more

திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் மத்திய பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: திறன் மேம்பாடு மற்றும் தொழிற்சாலைகளுடனான பிணைப்பை மேம்படுத்துவதற்கு மத்திய பட்ஜெட் சிறப்பு கவனம் செலுத்துவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்திய பட்ஜெட் 2022, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வ விளைவுகள் குறித்த இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சர்கள், கல்வி, திறன் மேம்பாடு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர். பட்ஜெட்டுக்கு முன்பும், பிறகும் சம்பந்தப்பட்ட … Read more

படையெடுப்பில் யாரைக் கொல்ல வேண்டும் என ரஷ்யா பட்டியல் வைத்துள்ளது: ஐ.நா.வுக்கு அமெரிக்கா கடிதம்

மாஸ்கோ: படையெடுப்பின்போது யாரைக் கொல்ல வேண்டும், யாரை முகாமுக்கு அனுப்ப வேண்டும் என ரஷ்யா பட்டியல் வைத்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் குழு தலைவருக்கு இது தொடர்பாக அமெரிக்கா கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், உக்ரைன் படையெடுப்பின் போது அந்த நாட்டில் உள்ள யாரையெல்லாம் கைது செய்ய வேண்டும், யாரையெல்லாம் வதை முகாம்களுக்கு அனுப்ப வேண்டும் என ரஷ்யா பட்டியலிட்டு வைத்துள்ளதாக எங்களுக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் சாதாரண மக்கள் அமைதி … Read more

'காவிரி டெல்டா விவசாயிகளுக்கு உடனுக்குடன் ரசீது' – நெல் கொள்முதல் நிலையங்களில் கையடக்க கருவிக்கு வரவேற்பு

தஞ்சாவூர்: நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லை விற்ற விவசாயிகளுக்கு உடனுக்குடன் அதற்கான ரசீதை வழங்க ஏதுவாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் கையடக்க கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை விற்கும்போது, அவர்களுக்கு முன்பெல்லாம் கொள்முதல் பணியாளர்கள் கையால் எழுதப்பட்ட ரசீதை வழங்கினர். பின்னர், டேப்ளாய்டு இயந்திரம் வழங்கப்பட்டது. இந்த இயந்திரத்தில் கொள்முதல் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, அதனை ப்ளூடூத் மூலம் இணைப்பு … Read more

கர்நாடகாவில் இந்து இளைஞர் படுகொலையால் பதற்றம்: ஷிவ்மோகாவில் 144 அமல்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பெங்களூரு: இந்து இளைஞர் படுகொலையால் கர்நாடகாவின் ஷிவ்மோகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஷிவ்மோகா மற்றும் பத்ராவதி நகர்களில் 144 தடை உத்தரவு அமலாகியுள்ளது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன? – ஷிவமோகா மாவட்டத்தின் சீகேஹாட்டி பகுதி பாரதி காலனியைச் சேர்ந்த ஹர்ஷா (26) நேற்றிரவு 10 மணியளவில் சில அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். இதனையடுத்து மெக் கேன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்த நபர் ஆர்எஸ்எஸ் … Read more

தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்காமல் தாய்மொழி நாளைக் கொண்டாடுவதால் என்ன பயன்?: ராமதாஸ் கேள்வி

சென்னை: தாய்மொழி தமிழுக்காக உயிரையும் கொடுப்பவர்கள் தமிழர்கள், நமது மாநிலத்தில் தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்காமல் தாய்மொழி நாளைக் கொண்டாடுவதால் என்ன பயன் என பாமக் நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தாய்மொழியின் பெருமையையும், ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு அந்நாட்டில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் உலக தாய்மொழி நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. பன்னாட்டு தாய்மொழி நாள் 23வது ஆண்டாக கொண்டாடப்படும் … Read more

கேரள அரசுப் பேருந்துகளில் செல்போனில் சத்தமாகப் பேச, பாட்டிசைக்கத் தடை: கேஎஸ்ஆர்டிசி நடவடிக்கை

திருவனந்தபுரம்: கேரள அரசுப் பேருந்துகளில் செல்போன் உள்ளிட்ட பிற எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தி சத்தமாக பாடல்களை இசைக்கவும் பயணத்தின் போது சத்தமாகப் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் அரசு பேருந்துகளில் சத்தமாக பேசவும், செல்போனில் சத்தமாக பாட்டு கேட்கவும் தடை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு பேருந்துகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளன. இது தொடர்பாக கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள அரசுப் பேருந்துகளில் செல்போன்களில் சத்தமாக பாட்டிசைக்கப்படுகிறது. பயணிகள் சத்தமாக செல்போனில் பேசுகின்றனர். அவர்களின் … Read more

ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டு மறு வாக்குப்பதிவு: காலை 9 மணி நிலவரப்படி 9% வாக்குகள் பதிவு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டில் இன்று (பிப் 21) மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு 108 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 21 வார்டுகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 28,042 வாக்காளர்களில் 21.435 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது 76.44 சதவீதமாகும். இந்நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 16வது வார்டுக்கு மறு தேர்தல் நடத்த தேர்தல் … Read more

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 16,051: உலகளவில் தொற்று குறைந்தாலும் நெருக்கடியில் ஹாங்காங்

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,051 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்றின் காரணமாக 206 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது: * கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,051 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. * இதுவரை கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 4,28,28,524. * கடந்த 24 மணி நேரத்தில் 37,901 பேர் காரோனாவில் இருந்து குணமடைந்தனர். * இதுவரை கரோனா … Read more

உக்ரைன் விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு பைடன், புதின் தயார்; பிரான்ஸ் தகவல்

பாரிஸ்: உக்ரைன் விவகாரம் தொடர்பாக விரைவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதுவரை உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கவில்லை என்றால் இந்த பேச்சுவார்த்தை சாத்தியப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ஏற்பாடு செய்திருக்கிறார். இது தொடார்பாக பிரான்ஸ் நாடு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுடன் … Read more