அருணாச்சல் மக்களின் வீரக்கதைகள் ஒவ்வொரு இந்தியருக்கும் விலைமதிப்பில்லா பாரம்பரியம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

புதுடெல்லி: ஆங்கிலேய அபோர் போராகட்டும், சுதந்திரத்திற்கு பின்னர் எல்லைப் பாதுகாப்பாகட்டும், அருணாச்சலப் பிரதேச மக்களின் வீரக்கதைகள் ஒவ்வொரு இந்தியருக்கும் விலைமதிப்பில்லா பாரம்பரியமாகும் என பிரதமர் மோடி கூறினார். அருணாச்சலப்பிரதேச பொன்விழா மற்றும் மாநிலம் அமைக்கப்பெற்ற 36-வது ஆண்டு தினத்தில், அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அனைவருடன் இணைந்து, அனைவருக்கும் மேம்பாடு, அனைவரின் விசுவாசம் , அனைவரின் முயற்சி என்கிற பாதை, அருணாச்சலப் பிரதேசத்தின் சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும். கிழக்கு இந்தியா, குறிப்பாக வடகிழக்கு இந்தியா … Read more

லண்டன் வீட்டை விஜய் மல்லையா காலி செய்ய வேண்டும்: யுபிஎஸ் வங்கிக் கடன் பாக்கி விவகாரத்தில் இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு

லண்டன்: யுபிஎஸ் வங்கியில் பெற்ற கடன்தொகையை திருப்பிச் செலுத்தாத காரணத்தால் லண்டனில் உள்ள வீட்டை காலி செய்யுமாறு தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லண்டனில் உள்ள ரீஜன்ட்பூங்காவுக்கு எதிரில் அமைந்துள்ளது 18/19 என்ற எண்ணில் உள்ள கார்ன்வால் டெரஸ் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பு. இதில் விஜய் மல்லையாவின் 95 வயதான தாய் லலிதா வசித்து வருகிறார். விஜய் மல்லையாவின் ரோஸ் கேபிடல் வெஞ்சர்ஸ் நிறுவனம் சுவிட்சர்லாந்தின் யுபிஎஸ் வங்கியில் இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பை … Read more

மறுவாக்குப்பதிவு நடத்த கோரி தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்ட மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள்

சென்னை: நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாலை 5 மணிக்குப் பின்னர் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால், மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி மக்கள் நீதி மய்யத்தினர் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 7 மணி … Read more

மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறை அறிவிப்பு: பிரதமர் மோடி நாளை ஆலோசனை

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் அறிவிப்புக்களை அமலாக்குவது தொடர்பான வெபினாருக்கு மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு முழு அமர்வில் பிரதமர் உரையாற்றுகிறார் பட்ஜெட் அறிவிப்புகளை விரைவாகவும், செயல்திறனுடனும் அமல்படுத்த, மத்திய அரசு பல்வேறு முக்கிய துறைகளில் தொடர் இணையவழி கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. பொதுத்துறை மற்றும் தனியார் துறை, கல்வி, தொழில் துறைகளின் நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை அறிந்து, பல்வேறு துறைகளின் கீழ், சிறந்த நடைமுறைகளைக் கண்டறிவதே இதன் நோக்கமாகும். இந்த தொடர் வெபினார்களின் ஒரு பகுதியாக, … Read more

தலைநகரை மாற்றும் இந்தோனேசியா: காரணம் என்ன? 

ஜகர்த்தா: இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவை போர்னியோ தீவுக்கு மாற்றும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிய தலைநகருக்கு நுசாந்தரா எனப் பெயர் வைக்கவும் இந்தோனேசிய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த சில வருடங்களாக இந்தோனேசியத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வந்த கோரிக்கை தற்போது நிறைவேறவுள்ளது. நாடாளுமன்றத்தில் தலைநகரை மாற்ற நாடாளுமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து புதிய தலைநகரை மேம்படுத்துவதற்கான பணியை இந்தோனேசியா தொடர்ந்துள்ளது. தேசிய திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு முகமையின் தரவுகளின்படி, புதிய தலைநகருக்கான மொத்த … Read more

குடியரசு தினவிழாவில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் தலைவர்கள் அலங்கார ஊர்தி: சென்னையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது

சென்னை: குடியரசு தினவிழாவில் புறக்கணிக்கப்பட்ட விடுதலை போராட்ட தமிழக தலைவர்கள் இடம் பெற்ற அலங்கார வாகனத்தை சென்னையில் இன்று பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 26ம் தேதி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக அரசு உள்பட பல மாநிலங்களில் அலங்கார வாகன ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டது. கரோனா பரவலை காரணம் காட்டியதாக கூறினாலும் பாஜகவிற்கு ஆதரவு இல்லாத மாநிலங்களின் வாகனங்கள் புறக்கணிப்பதாக அரசியல் கட்சி பிரமுகர் குற்றம்சாட்டினர். இதனிடையே, டெல்லி பேரணியில் புறக்கணித்ததற்கு ஈடு செய்யும் … Read more

உ.பி. 3-ம் கட்ட தேர்தல்: அகிலேஷ் தொகுதியில் வாக்குப்பதிவு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 3-ம் கட்டமாக 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹால் உள்ளிட்ட தொகுதிகளில் விறு விறுப்பான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 10, 14-ம் தேதிகளில் இரு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் 3-ம் கட்டமாக இன்று 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதி களில் … Read more

ஒமைக்ரான் பரவினாலும் ஊரடங்கு கிடையாது: நியூசிலாந்து

ஒமைக்ரான் பரவ ஆரம்பித்தாலும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று நியூசிலாந்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, “இந்தக் காலகட்டத்தில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் தொற்று, முன்பை விட வித்தியாசமானது. ஒமைக்ரான் அதிகம் தொற்றும் தன்மை கொண்டது. இது கடினமாக இருக்கப் போகிறது. கோவிட் மாறும்போது நாமும் மாற வேண்டியுள்ளது. ஆனால், இந்த முறை ஒமைக்ரான் காரணமாக கரோனா பரவல் ஏற்பட்டாலும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. கட்டுப்பாடுகளை மட்டுமே … Read more

கோயில் அறங்காவலரை நியமிக்க என்ன நடைமுறை?- அரசு அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்க என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கோயில்களில் நிரப்பப்படாமல் உள்ள அறங்காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரியும், இந்த நியமனங்களை கண்காணிக்க முன்னாள் நீதிபதி தலைமையில், அறநிலையத் துறைஅதிகாரிகள் அடங்கிய குழுவைஅமைக்கக் கோரியும் ரங்கராஜன்நரசிம்மன் என்பவர் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அமர்வில் இந்தவழக்கு மீதான … Read more

ஆசியாவின் மிகப்பெரிய சாண எரிவாயு ஆலை: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிரதமர் நரேந்திர மோடி திறப்பு

மத்திய பிரதேசம் இந்தூரில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய சாண எரிவாயு ஆலையைபிரதமர் மோடி நேற்று காணொலிமூலம் திறந்து வைத்தார். தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் குப்பை இல்லா நகரங்களை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன் பகுதியாகவே இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த ஆலையை காணொலி வாயிலாக திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, ‘சாண எரிவாயு ஆலை மிக முக்கியமான ஒரு முன்னெடுப்பு. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 75 … Read more